For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"விதி"களுக்குப் புறம்பாக கருப்பு பிராவுடன் ஆடிய கனடா வீராங்கனை.. விம்பிள்டனில் களேபரம்!

விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸைப் போல கிடுக்கிப்பிடியானி விதிமுறைகளைக் கொண்ட விளையாட்டுப் போட்டியை எங்குமே காண முடியாது. அந்த அளவுக்கு டிரஸ் கோட் இங்கு மிகவும் இறுக்கமானது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவரான கனடா வீராங்கனை யூஜெனி போச்சார்ட், விதிமுறைக்கு மாறாக கருப்பு பிரா போட்டு வந்தது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது.

இருப்பினும் தெரியாமல் அவர் இந்தத் தவறை செய்ததால் அவருக்கு தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. அதேசமயம் அவர் தனது முதல் சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறி விட்டார்.

விம்பிள்டன் போட்டியில் பங்கேற்கும் வீரர்களும், வீராங்கனைகளும் உடைக் கட்டுப்பாட்டை மிகத் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும். அதில் மீறல்கள் இருந்தால் அபராதம், தடை உள்ளிட்டவை விதிக்கப்படும். பாரபட்சமே பார்க்க மாட்டார்கள்.

எல்லாமே வெள்ளைதான்

எல்லாமே வெள்ளைதான்

அங்கு எல்லாமே வெள்ளைக் கலர்தான். உடை, ஷூ, உள்ளாடை என எல்லாமே வெள்ளைக் கலரில்தான் இருக்க வேண்டும். வேறு நிறத்துக்கு இங்கு அனுமதி கிடையாது. அதற்கும் கூட அளவுகோல்கள் உண்டு.

உள்ளாடையும் வெள்ளைதான்

உள்ளாடையும் வெள்ளைதான்

உள்ளாடைகள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. வீராங்கனைகள் போடும் ஸ்கர்ட்டுக்கும் கூட உயரம் உண்டு. அதில் குறைந்தால் அவ்வளவுதான் தீட்டி விடுவார்கள் தண்டனையை. மிகவும் கட்டுப்பாட்டுடன் வீரர், வீராங்கனைகள் நடந்து கொள்ள வேண்டும்.

ஷூவால் வெளியேறிய பெடரர்

ஷூவால் வெளியேறிய பெடரர்

இப்படித்தான் 2003ம் ஆண்டு ரோஜர் பெடரர் தனது ஷூவில் ஆரஞ்சு கலரில் லேசான பார்டர் கட்டி இருந்ததால் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டார்.

பிராவால் பிரச்சினை

பிராவால் பிரச்சினை

இந்த நிலையில் கனடா வீராங்கனை போச்சார்ட் தான் அணிந்திருந்த பிராவால் பிரச்சினைக்குள்ளாகியுள்ளார். இவர் கருப்பு நிற பிராவை அணிந்திருந்ததுதான் சர்ச்சையாகி விட்டது.

சீன வீராங்கனையுடன் மோதல்

சீன வீராங்கனையுடன் மோதல்

சீன வீராங்கனை யிங் யாங்குடன், போச்சார்ட் தனது முதல் சுற்றுப் போட்டியில் மோதினார். இப்போட்டியில் அவர் 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் தோல்வியைச் சந்தித்து வெளியேறினார்.

கருப்பு பிரா

கருப்பு பிரா

இந்தப் போட்டியில் போச்சார்ட் தான் அணிந்திருந்த வெள்ளை உடைக்கு உள்ளே கருப்பு நிற பிராவை அணிந்திருந்தார். இந்த பிராவின் ஸ்டிராப் போட்டியின்போது வெளியே தெரிந்தது.

சோதனை போட்ட லூசி

சோதனை போட்ட லூசி

இதையடுத்து நடுவர் லூசி என்ஜெல் போச்சார்டை அருகே அழைத்து அவரது உடையைப் பரிசோதித்தார். அதன் பின்னர் நடுவர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு போச்சார்ட் போட்டுள்ள பிராவால் டிரஸ்கோடு விதிமீறல் உள்ளதா என்று கேட்டார். ஆனால் நடுவர் அலுவலகம், விதிமீறல் இருப்பதாக தெரியவில்லை என்று விளக்கியது. இதையடுத்து போச்சார்டை தொடர்ந்து விளையாட அனுமதித்தார் நடுவர் லூசி.

யாருமே சொல்லலையே

யாருமே சொல்லலையே

பின்னர் இதுகுறித்து போச்சார்ட் ஒரு இதழுக்கு அளித் பேட்டியில் எனக்கு அதுகுறித்து எதுவுமே தெரியாது. யாரும் எனது பிரா குறித்து எதையும் தெரிவிக்கவில்லை என்றார்.

மாடலிங் இருக்குப்பா

மாடலிங் இருக்குப்பா

போச்சார்ட் டென்னிஸ் வீராங்கனை என்றாலும் கூட மாடலிங்கில் அவர் பயங்கர பிசியாக இருப்பவர் ஆவார். ஐஎம்ஜி மாடலிங் ஏஜென்சியுடன் அவர் பெரிய தொகைக்கும் ஒப்பந்தமாகியுள்ளார். எனவே விம்பிள்டன் தோல்வியால் துவண்டாலும் கூட இந்த விளம்பர ஒப்பந்தம் அவரை சந்தோஷப்படுத்தும் என்று நம்பலாம்.

Story first published: Thursday, July 2, 2015, 7:46 [IST]
Other articles published on Jul 2, 2015
English summary
All England Club nearly took the dress code to new levels on Tuesday when a chair umpire phoned the referee’s office to see if there was an issue with the black sports bra that 2014 finalist Genie Bouchard was wearing underneath her white sports bra. The referee’s office, thankfully, said there was not a violation.--
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X