For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னாது ரூல்சை மீறியிருக்காங்களா? கைது செய்யப்பட்ட ரக்பீ வீரர்கள்

சுவா : கொரோனா வைரஸ் ஊடரங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக பிஜி நாட்டை சேர்ந்த இரண்டு ரக்பீ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிஜி ரக்பீ சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் பாதிப்பையடுத்து ஏறக்குறைய அனைத்து நாடுகளும் தங்களை தனிமைப்படுத்தியுள்ளன. சர்வதேச அளவில் அனைத்து நிகழ்வுகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிஜி நாட்டை சேர்ந்த இரண்டு ரக்பீ வீரர்கள் விதிமுறைகளை மீறியுள்ளதாக பிஜி ரக்பீ சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும் சர்வதேச அளவில் விளையாடி வருபவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள்

வீட்டிற்குள்ளேயே முடங்கிய மக்கள்

சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏறக்குறைய அனைத்து நாடுகளும், ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அனைத்து நிகழ்வுகளும், குறிப்பாக சர்வதேச விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

பதைபதைப்பில் உலக நாடுகள்

பதைபதைப்பில் உலக நாடுகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சர்வதேச அளவில் இதுவரை 12,00,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 65,000 நெருங்கியுள்ளது. இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் பதைபதைப்பில் உள்ளன. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து வெளிவரும் காலம் எப்போது என்பது குறித்து உலக மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

2 வீரர்கள் கைது

2 வீரர்கள் கைது

இந்நிலையில், பிஜி நாட்டை சேர்ந்த இரண்டு ரக்பீ வீரர்கள் கொரோனா தொடர்பான ஊரடங்கு விதிகளை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து பிஜி நாட்டிற்கு திரும்பிய ரக்பீ வீரர் ஒருவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். இந்நிலையில், அவர் உள்ளிட்ட இரண்டு ரக்பீ வீரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீண்டும் தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் வருத்தம்

பிரதமர் வருத்தம்

இந்நிலையில், அவர்கள் குறித்த அடையாளங்களை வெளிப்படுத்தாத பிஜி ரக்பீ சங்கம், ஆனால் அவர்கள் சர்வதேச வீரர்கள் என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, அவர்கள் இருவரும், பிஜி மக்களை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாக பிரதமர் பிராங்க் பெய்னிமராமா தெரிவித்துள்ளார். வெளிநாட்டிலிருந்து வந்த அந்த வீரர் விதிமுறைகளை கடைப்பிடித்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பிஜி ரக்பீ சங்கம் அறிவிப்பு

பிஜி ரக்பீ சங்கம் அறிவிப்பு

இந்நிலையில், அந்த வீரர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிஜி ரக்பீ சங்கம் அறிவித்துள்ளது. அவர்களின் இந்த செயல்பாடு ஏமாற்றமளிப்பதாக தலைமை நிர்வாகி ஜான் ஓ'கொன்னார் தெரிவித்துள்ளார். இதை ஏற்க முடியாது என்று கூறியுள்ள அவர், அவர்கள் மீது காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Story first published: Sunday, April 5, 2020, 10:43 [IST]
Other articles published on Apr 5, 2020
English summary
Coronavirus Self-Isolation Rules :Fiji Rugby players arrested for breaching
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X