For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட உலகின் முதல் சுமோ வீரர்.. ஜப்பானில் சோகம்!

டோக்கியோ: ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டான சுமோ மல்யுத்த விளையாட்டு வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

Recommended Video

விமர்சனம் செய்தவர்களுக்கு தோனி எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா?

ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி உள்ளது. அங்கே 5,300 மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், 100க்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர்.

First Sumo wrestler to be tested positive in Japan

ஜப்பான் நாட்டில் புனிதமாக கருதப்படும் சுமோ விளையாட்டுக்கான பயிற்சிகள் அங்கே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையேயும் தொடர்ந்து நடந்து வருகிறது.

அடுத்த சுமோ போட்டித் தொடர் மே 10 அன்று துவங்க இருந்தது. அந்த தொடர் தற்காலிகமாக இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சின் போது வீரர்கள் முகக் கவசம் அணிந்து கொள்வது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மட்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரபலமில்லாத சுமோ வீரர் ஒருவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு தற்போது கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி உள்ளது. அவர் பயிற்சி செய்த இடத்தில் இருக்கும் மற்ற அதிகாரிகள், வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என ஜப்பானின் சுமோ அமைப்பு கூறி உள்ளது.

சுகாதார பணியாளர்கள் தான் இப்போ சாம்பியன்ஸ்... நம்மள சுத்தி அவங்க நிறைய பேரு இருக்காங்க... சுகாதார பணியாளர்கள் தான் இப்போ சாம்பியன்ஸ்... நம்மள சுத்தி அவங்க நிறைய பேரு இருக்காங்க...

இந்த சம்பவத்தால் அடுத்த சுமோ போட்டித் தொடர் மே மாதத்தில் நடக்குமா? ரத்து செய்யப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய சமயத்தில் சீனாவை அடுத்து ஜப்பானில் தான் அதிக பாதிப்பு இருந்தது. எனினும், அங்கே அந்த பாதிப்பு பெரிதாக மாறவில்லை. சமீபத்தில் தான் ஜப்பானில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கே தற்போது வரை நிலைமை கட்டுக்குள் தான் இருக்கிறது.

Story first published: Friday, April 10, 2020, 23:42 [IST]
Other articles published on Apr 10, 2020
English summary
First Sumo wrestler to be tested positive in Japan. However, his name is not disclosed.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X