For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெறும் 70,000 மக்கள் தொகை.. சுண்டுவிரல் நாடு.. ஒலிம்பிக்கில் அடிச்சாங்க பாரு "கோல்டு"

ஜப்பான்: ஒரு நாடு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதற்கு மக்கள் தொகை முக்கியமல்ல என்பதை நிரூபித்திருக்கிறது பெர்முடா.

யெஸ்.. வரலாற்றில் முதன்முறையாக அந்த நாடு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் அந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

 IND vs SL 2nd T20: க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி.. போட்டி ஒத்திவைப்பு? IND vs SL 2nd T20: க்ருனால் பாண்ட்யாவுக்கு கொரோனா உறுதி.. போட்டி ஒத்திவைப்பு?

இந்த அரிய சாதனையை அறிந்த பெர்முடா தேசமே தற்போது ஆனந்தக் கண்ணீருடன் தங்கள் வெற்றியை கொண்டாடி வருகிறது.

ஒரே பதக்கம்

ஒரே பதக்கம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரவாரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்கத்தை குவித்து வருகின்றன. இந்தியா சார்பில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். ஸோ, இந்த நிமிடம் வரை இந்தியா வென்ற பதக்கம் இதுமட்டும் தான்.

முதல் தங்கம்

முதல் தங்கம்

இந்நிலையில், பெண்களுக்கான triathlon போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில், யாருமே எதிர்பார்க்காத வகையில், பெர்முடா நாட்டைச் சேர்ந்த ஃபுளோரா டஃபி என்பவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று புது சரித்திரம் படைத்துள்ளார். 33 வயதான ஃபுளோரா, ஒரு மணி நேரம் 55:36 நிமிடங்களில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். பிரிட்டன் 2ம் இடத்தையும், அமெரிக்கா 3ம் இடத்தையும் பிடித்தன.

45 வருடங்கள் கழித்து

45 வருடங்கள் கழித்து

ஏறக்குறைய வெறும் 70,000 மக்கள் தொகையைக் கொண்ட பெர்முடா நாட்டில் இருந்து தங்கம் வெல்லும் முதல் வீராங்கனை எனும் சாதனையை ஃபுளோரா பெற்றுள்ளார். இன்னும் சொல்லப்போனால், கடந்த 1976ம் ஆண்டு, heavyweight பிரிவில் கிளாரன்ஸ் கேஹில் என்பவர் வெண்கலப்பதக்கம் வென்றதே அந்த நாட்டின் முதல் ஒலிம்பிக் பதக்கமாக அமைந்தது. அதன் பிறகு அந்த நாடு இப்போது தான்.. அதாவது 45 வருடங்கள் கழித்து அந்த நாடு தான் 2வது ஒலிம்பிக் பதக்கத்தை வென்றிருக்கிறது. அதுவும் தங்க பதக்கமாக.

போராடும் நாடுகள்

போராடும் நாடுகள்

உலகின் பல நாடுகள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல இன்னமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், பெர்முடா அந்த சாதனையை தற்போது நிகழ்த்திக்காட்டிவிட்டது. இந்தியாவில் தனிநபர் பிரிவில், அபினவ் பிந்த்ரா மட்டுமே தங்கம் வென்றிருக்கிறார். அவருக்கு முன்போ, பின்னரோ தனி நபராக இந்தியாவில் இருந்து எவரும் தங்கம் வென்றதில்லை.

Story first published: Tuesday, July 27, 2021, 20:07 [IST]
Other articles published on Jul 27, 2021
English summary
Flora wins women's triathlon Bermuda 1st gold - பெர்முடா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X