For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது வருடத்தில் குத்துச்சண்டை வீரருக்கு அடித்த யோகம்.. 2 நிமிடத்தில் 9 மில்லியன் டாலர் அள்ளினார்

டோக்கியோ : பிரபல குத்துச் சண்டை வீரர் ஃபிளாய்ட் மேவெதர் குத்துச் சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

2019 புத்தாண்டை ஒட்டி ஜப்பானில் நடைபெற்ற கண்காட்சி போட்டி ஒன்றில் பங்கேற்றார். இந்த போட்டியில் குத்துச்சண்டை போட்டிகளில் அனுபவமற்ற கிக்-பாக்ஸிங் வீரரை சந்தித்தார்.

தோல்வியே அடையாத வீரர்

தோல்வியே அடையாத வீரர்

ஃபிளாய்ட் மேவெதர் குத்துச்சண்டை போட்டிகளில் தோல்வியே அடையாத ஒரு வீரர் ஆவார். தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 50-0 என்ற ரெக்கார்டு வைத்திருக்கும் ஓய்வு பெற்ற வீரர். ஜப்பானின் ரிஜின் என்ற தற்காப்புக் கலை போட்டிகள் நடத்தும் நிறுவனம்.

9 நிமிட போட்டி

9 நிமிட போட்டி

விளம்பர ரீதியிலான கண்காட்சி குத்துச்சண்டை போட்டி ஒன்றை நடத்தியது. அதில் ஃபிளாய்ட் மேவெதர், ஜப்பானின் நாசுகாவா என்ற 20 வயது வீரரை சந்தித்தார். இந்த போட்டி மூன்று சுற்றுக்கள் என்றும், ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடங்கள் என ஒன்பது நிமிடங்கள் கொண்ட போட்டியாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

9 மில்லியன் டாலர்

9 மில்லியன் டாலர்

இதற்கு சம்பளமாக ஃபிளாய்ட் மேவெதருக்கு 9 மில்லியன் டாலர்கள் தரப்பட்டது. ஒன்பது நிமிட போட்டியை 139 வினாடிகளில் முடித்த மேவெதர் எளிதாக வெற்றி பெற்றார். மேவெதர் பணம் சம்பாதிக்க வேண்டி இந்த போட்டிக்கு ஒப்புக் கொண்டாரே ஒழிய இதில் எந்த பெருமையும் இல்லை என சிலர் கூறி வருகின்றனர்.

விளம்பர நோக்கம்

விளம்பர நோக்கம்

விளம்பர நோக்கத்திற்காக புது வருட விழாவாக நடத்தப்பட்ட இந்த போட்டியில், மேவெதர் பெரிய அளவில் பணம் ஈட்டி புது வருடத்தை செல்வச் செழிப்போடு துவங்கி உள்ளார்.

Story first published: Tuesday, January 1, 2019, 11:58 [IST]
Other articles published on Jan 1, 2019
English summary
Floyd Mayweather Jr. earns 9 millions dollars in 2 minutes on New year. This is a big steal for Mayweather.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X