சிங்கப்பூரில் நடந்த “ஜமாலியன் இறகுப்பந்து போட்டி”

By

சிங்கப்பூர்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை கடந்த 9ம் தேதி இறகுப்பந்து போட்டியை நடத்தியது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சிங்கப்பூர் கிளை 9-05-2015 அன்று இறகுப்பந்து போட்டியை நடத்தியது. பிற்பகல் 2 மணிக்கு துவங்கிய போட்டி இரவு 8 மணி வரை சிங்கப்பூர் பெக் கியோ சமூக மன்றத்தில் (PEK KIO COMMUNITY CENTRE) நடைபெற்றது.

சிங்கப்பூருக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கும் நோக்கிலும், ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டும் வகையிலும் நடத்தப்பட்ட

இறகுப்பந்து போட்டியில் நாற்பது போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்ற கல்லூரியின் முன்னாள் மாணவர்களான திரு. அப்துல் காதர் மற்றும் சஹாபுதீன் குழுவினருக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்திய முஸ்லிம் பேரவையின் துணைத் தலைவரும், சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் தலைவருமான டாக்டர் கே. எம். தீன் முதல் பரிசு கோப்பைகளையும், கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter) has conducted shuttlecock competition in Singapore on May 9th.
Story first published: Wednesday, May 13, 2015, 17:35 [IST]
Other articles published on May 13, 2015
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X