For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"சக் தே இந்தியா".. ஹாட்ரிக் தோல்வியில் இருந்து மீண்டு.. ஹாக்கியில் சகாப்தம் படைத்த வொண்டர் வுமன்ஸ்!

டோக்கியோ: ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்திய பெண்கள் ஹாக்கி அணி செமி பைனலுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

Recommended Video

Tokyo Olympics : Indian Women Hockey Team Beats Australia and Qualifies to Semi Finals

"அவ்வளவுதான் அவங்க இதை முடிஞ்சிட்டு.. இனி இவங்களை நம்ப முடியாது.. வுமன்ஸ் டீம் அடுத்தடுத்து ஜெயிக்கிறது எல்லாம் சக் தே இந்தியா படத்துலதான் நடக்கும்".. ஒலிம்பிக் தொடரில் இந்தியா பெண்கள் ஹாக்கி அணி அடுத்தடுத்து 3 தோல்விகளை சந்தித்த பின் எழுந்த விமர்சனம் இது.

ஒலிம்பிக் ஹாக்கி.. இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.. ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது! ஒலிம்பிக் ஹாக்கி.. இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை.. ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது!

கிட்டத்தட்ட பெண்கள் ஹாக்கி அணியின் கதை முடிந்துவிட்டது என்றுதான் பலரும் நினைத்தனர். காரணம் வரிசையாக இந்தியா 3 போட்டிகளில் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தது. அதிலும் மூன்று போட்டியிலும் இந்திய மகளிர் படை பெரிதாக போராடாமலே தோல்வி அடைந்தது.

போராட்டம்

போராட்டம்

முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணி தோல்வியோடுதான் தொடங்கியது. நெதர்லாந்திற்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. ஆம் 5 கோல் வரை நெதர்லாந்து அடிக்கும் அளவிற்கு இந்திய அணியின் டிபன்ஸ் மிக மோசமாக அமைந்து இருந்தது. இந்த போட்டியின் முடிவிலேயே இந்தியா கண்டிப்பாக இனி வெற்றபெறாது என்ற எண்ணம்தான் பலரிடம் நிலவியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி இதை விட பெரிய அதிர்ச்சிகளை கொடுத்தது. ஜெர்மனிக்கு எதிரான போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் வீழ்ந்தது. இந்த போட்டியிலும் இந்திய பெண்கள் அணியிடம் நல்ல பார்ம் காணப்படவில்லை.அதேபோல் வீராங்கனைகளுக்கு இடையே நிறைய கம்யூனிகேஷன் குறைபாடுகள் இருந்தது.

தோல்வி

தோல்வி

பின்னர் மீண்டும் கிரேட் பிரிட்டனுக்கு எதிரான மூன்றாவது ஹாக்கி போட்டியிலும் இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. கிரேட் பிரிட்டன் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனால் இந்திய மகளிர் அணியின் கதை முடிந்துவிட்டது என்றே பலரும் விமர்சனம் வைத்தனர். காரணம் அடுத்த இரண்டு போட்டியிலும் இந்தியா வெல்ல வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்.. அதில் ஒரு போட்டி அயர்லாந்து என்ற வலுவான அணிக்கு எதிரான போட்டி.

ஏளனம்

ஏளனம்

இதனால் இந்திய அணி லீக் போட்டிகளில் இருந்து வெளியேறவே அதிக வாய்ப்பு இருந்தது. ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய மகளிர் அணி நிகழ்த்தியது சுத்தமான மேஜிக்.. மாஸ் படங்களில் வருவதை போன்ற டிவிஸ்ட்.. சக் தே இந்தியா படத்தில் காட்டப்பட்டது போன்ற அதே "rise of underdog" பாணி எழுச்சி! ஆம் அடுத்த போட்டியிலேயே அயர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது.

பல கோல்

பல கோல்

இந்த போட்டியில் அயர்லாந்துக்கு கோல் அடிக்க பல வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய மகளிர் படை அதை தடுத்து, கடைசி கட்டத்தில் ஒரு கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. இந்த போட்டிக்கு பின்பும் கூட இந்திய அணி காலிறுதிக்கு செல்வது சந்தேகமாகவே இருந்தது. அடுத்த போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டிய கட்டாயம்.

வெற்றி

வெற்றி

அந்த போட்டியில் இதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் திரில் ஆட்டத்தில் வெற்றிபெற்றது. தென்னப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, சறுக்கலில் இருந்து மீண்டு குழு புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்து இந்தியா காலிறுதி சென்றது.

செமி பைனல்

செமி பைனல்

இந்த நிலையில்தான் இன்று ஆஸி.யை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முதல்முறையாக செமி பைனலுக்கு தகுதி பெற்றது. 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி செமி பைனலுக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா போன்ற அணியை ஒரு கோல் கூட அடிக்க விடாமல் காலிறுதியில் வெல்வது எல்லாம் வேற லெவல் திறமை!

கடினம்

கடினம்

இந்தியா பெண்கள் அணி முதல்முறை ஹாக்கி ஒலிம்பிக் வரலாற்றில் செமி பைனலுக்கு தகுதி பெறுகிறது. இதற்கு முன் இந்திய மகளிர் அணி இப்படி ஒரு சாதனையை படைத்தது கிடையாது. அதிலும் இந்த தொடரில் மிகவும் வலிமையான அயர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற பெரிய கைகளை காலி செய்து இந்திய பெண்கள் அணி செமி பைனலுக்கு அடியெடுத்து வைத்துள்ளது... ஒலிம்பிக் போட்டியில் இதே பார்மில் இந்திய மகளிர் அணி தொடர்ந்தாள் கண்டிப்பாக தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

இந்தியாவின் இந்த ஹாக்கி வெற்றி மிகப்பெரிய வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹாக்கி போன்ற போட்டிகளுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலையில் ஹாக்கி வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்துள்ளனர். முக்கியமாக இந்த ஹாக்கி வெற்றி மீண்டும் இந்தியாவில் ஹாக்கியின் எழுச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்கள் பெண்கள் இரண்டு அணியும் ஹாக்கி செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் காரணமாக வரும் நாட்கள் இந்திய ஹாக்கி அணிகள் கூடுதல் ஸ்பான்சர்களை பெற வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Tuesday, August 3, 2021, 7:59 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
From 3 straight defeats to now Olympics Semifinal: How Indian women team did the wonder the hockey?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X