For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக் கோல்ஃப் பிரிவில்.. இந்தியாவுக்காக கடைசி நிமிடத்தில் பற்றும் "தீ".. தீ என்றால் தீக்ஷா

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் மூவ் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியாவின் கைகள் தற்போது ஓங்கத் தொடங்கியுள்ளன. பளுதூக்குதல் பிரிவில், மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு, மேற்கொண்டு பதக்கம் வெல்ல முடியாமல் இந்தியா தடுமாறி வந்தது.

ஒலிம்பிக் 2020 கொரோனா.. மொத்த ஆஸி. தடகள குழுவும் தனிமைப்படுத்தப்பட்டது.. எல்லோருக்கும் டெஸ்ட் ஒலிம்பிக் 2020 கொரோனா.. மொத்த ஆஸி. தடகள குழுவும் தனிமைப்படுத்தப்பட்டது.. எல்லோருக்கும் டெஸ்ட்

இந்த நிலையில், வில்வித்தை, பேட்மிண்டன், ஹாக்கி என்று இந்தியா காலிறுதி வரை முன்னேறிச் சென்றுக் கொண்டிருக்கிறது.

தீக்ஷா தாகர்

தீக்ஷா தாகர்

இந்த நிலையில், பெண்களுக்கான கோல்ஃப் பிரிவின் ஆட்டங்கள் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் நடைபெறுகின்றன. இதில், இந்தியாவின் சார்பில் 'Later Entry' வீராங்கனையாக தீக்ஷா தாகர் அழைக்கப்பட்டுள்ளார். பெண்கள் கோல்ஃப் அணியில் ஏற்கனவே அதிதி அஷோக் டோக்கியோவில் இருக்கும் நிலையில், தீக்ஷாவும் தற்போது இணைய உள்ளார்.

தீக்ஷாவுக்கு வாய்ப்பு

தீக்ஷாவுக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்காவின் கோல்ஃப் நட்சத்திரம் பவுலா ரேடோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறுவதாக அறிவித்ததால், தீக்ஷாவுக்கு ஒலிம்பிக்கில் இடம் பெற தகுதிப் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, ஆஸ்திரியா தனது கோல்ப் நட்சத்திரம் சாரா ஸ்கோபருக்கு reallocation செய்ய வேண்டாம் என்று முடிவு செய்ததன் காரணமாகவும் தீக்ஷாவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

காது கேளாமை

காது கேளாமை

இதன் மூலம், முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு தீக்ஷாவுக்கு கிடைத்துள்ளது. இயற்கையாகவே அவர் காது கேளாமை குறைபாடு கொண்டவர். எனினும், தீக்ஷா இன்னமும் டோக்கியோ வந்தடையவில்லை. அவருக்கான பயண ஏற்படும் மற்றும் இதர வசதிகளை மேற்கொள்ளும் பணியை இந்திய கோல்ஃப் சங்கம் மேற்கொண்டு வருகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

அதிதிக்கு இது இரண்டாவது ஒலிம்பிக் தொடராகும். ஆனால், தீக்ஷாவுக்கு இது முதல் ஒலிம்பிக் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, 2017ல் நடைபெற்ற Deaf Olympic போட்டியில், இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றவர் தீக்ஷா. 2018 ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் Ladies European Tour என அனைத்திலும் அசத்தியவர் தீக்ஷா என்பவதால், கோல்ஃப் பிரிவில் இந்தியாவின் பலம் கூடியுள்ளது.

Story first published: Thursday, July 29, 2021, 18:54 [IST]
Other articles published on Jul 29, 2021
English summary
Golfer Diksha Dagar qualifies for Tokyo Olympics - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X