For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னணி வீரர் டிமிட்ரோவ்வுக்கு கொரோனா உறுதி.. முன்னெச்சரிக்கை இன்றி நடந்த டென்னிஸ் தொடர்

அட்ரியா : ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் 19வது இடத்தில் இருக்கும் கிரிகோர் டிமிட்ராவ்-க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் இந்த தகவலை இன்ஸ்டாகிராம் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார். அவர் கடந்த வாரம் முழுவதும் நோவாக் ஜோகோவிக் நடத்திய டென்னிஸ் தொடரில் பங்கேற்றதால் அவருடன் பங்கேற்ற வீரர்கள் பீதியில் உள்ளனர்.

கிரிக்கெட் ஜாம்பவான் ராஜேந்தர் கோயல் மறைவு... வயதுமூப்பு காரணமாக உயிரிழப்பு கிரிக்கெட் ஜாம்பவான் ராஜேந்தர் கோயல் மறைவு... வயதுமூப்பு காரணமாக உயிரிழப்பு

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

அந்த டென்னிஸ் தொடரில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. மேலும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக நடந்தது அந்த தொடர். வீரர்கள் முகக் கவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடைப்பந்து ஆடுவது, பார்ட்டி செய்வது என ஆட்டம் போட்டுள்ளனர்.

நிதி திரட்டும் தொடர்

நிதி திரட்டும் தொடர்

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிக் தன் சொந்த நாடான செர்பியா மற்றும் அருகில் உள்ள மூன்று நாடுகளில் நிதி திரட்டும் டென்னிஸ் தொடரை நடத்தி வந்தார். நான்கு பகுதிகளாக நான்கு நாடுகளில் இந்த தொடர் நடக்க இருந்தது.

முன்னெச்சரிக்கை இல்லை

முன்னெச்சரிக்கை இல்லை

அந்த தொடரின் முதல் பகுதி செர்பியாவில் நடைபெற்றது. இரண்டாம் பகுதி குரோஷியாவில் நடைபெற்றது. இந்த இரண்டு நாடுகளிலும் லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டு விட்டன. அதனால், வீரர்கள் எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல், முகக் கவசம், சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தனர்.

நெருங்கிப் பழகிய கிரிகோர்

நெருங்கிப் பழகிய கிரிகோர்

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் கிரிகோர் டிமிட்ரோவ் அனைவரிடமும் நெருங்கிப் பழகி வந்தது குறிப்பிடத்தக்கது. செர்பியாவில் தொடர் நடந்த போது ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 4,000 ரசிகர்கள் வந்தனர்.

விமர்சனம் எழுந்தது

விமர்சனம் எழுந்தது

செர்பியா தொடரின் முடிவில் சமூக இடைவெளி, வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யாதது குறித்து விமர்சனம் எழுந்தது. அப்போது நோவாக் ஜோகோவிக் அரசு சொல்வதை தான் செய்கிறோம் என பொறுப்பின்றி பதில் அளித்தார்.

குவிந்த ரசிகர்கள்

குவிந்த ரசிகர்கள்

தொடர்ந்து குரோஷியாவில் பாதி அளவில் மட்டுமே ரசிகர்கள் இருக்கும்படி பார்த்துக் கொண்டனர். அப்படியும் ஒவ்வொரு போட்டிக்கும் 4,500 ரசிகர்கள் திரண்டனர். அந்த தொடரில் கிரிகோர் டிமிட்ரோவ் சனிக்கிழமை நடந்த போட்டியில் தோல்வி அடைந்தார்.

கொரோனா வைரஸ் உறுதி

கொரோனா வைரஸ் உறுதி

அத்துடன் தனக்கு உடல்நிலை சரியில்லை என தொடரில் இருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து நோவாக் ஜோகோவிக் மோத இருந்த இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டது. மேலும், கிரிகோர் டிமிட்ரோவ்வுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீதி

பீதி

தற்போது அவருடன் டென்னிஸ் ஆடிய வீரர்கள், போட்டி நடுவர்கள், ரசிகர்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு அறிகுறிகள் உள்ளதா என தொடரை நடத்திய ஜோகோவிக் சகோதரர் கேட்டுள்ளார். கிரிகோர் தவிர வேறு யாருக்கும் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.

Story first published: Monday, June 22, 2020, 12:02 [IST]
Other articles published on Jun 22, 2020
English summary
Grigor Dimitrov tested positive, other players, whom played for Novak Djokovic charity event also in risk after no social distancing, precautionary mesaures taken.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X