For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் பெயர் நீரஜ் சோப்ராவா? - பிடியுங்கள் 5 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. பங்க் உரியமையாளரின் தாராளம்!

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயரை வைத்திருப்பவர்களுக்கு பெட்ரோல் இலவசமாக தரப்படும் என்ற பங்க் ஓனரின் அறிவிப்பால் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது.

Recommended Video

Neeraj Chopra Returns! Grand welcome for gold-medalist | OneIndia Tamil

ஒலிம்பிக் வரலாற்றில் புதிய மைல்கல்லாக இந்திய அணி எப்போதும் இல்லாத வகையில் இந்த ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் வென்றதே சிறந்த எண்ணிக்கையாக இருந்த நிலையில் இந்தாண்டு 7 ஆக உயர்ந்துள்ளது.

இந்த முறை கூடுதலாக வந்த அந்த ஒரு பதக்கத்திற்கு காரணமானவர் தான் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார்.

ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா பாகிஸ்தானின் மோசமான நிலைஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது பதக்கப்பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா பாகிஸ்தானின் மோசமான நிலை

சாதனை

சாதனை

நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியிலேயே 87 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி வீசினார். பின்னர் 2-வது முயற்சியில் அதைவிடக் அதிகமாக 87.58 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். இதையடுத்து, அதிகமான தொலைவு எறிந்து நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகளப்பிரிவில் பதக்கம் வென்றுகொடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார். இந்நிலையில் நீரஜ் சோப்ராவுக்குப் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பணம், கார், பரிசுகள் என ஏகபோகத்திற்கு குவிந்து வருகிறது.

குவியும் பரிசு

குவியும் பரிசு

ஹரியானா மாநில முதல்வர் எம்.எல்.கட்டார், நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி ரொக்கப் பரிசும், முதல்நிலைப் அரசுப்பணியும், ஒரு காலிமனை குறைந்த விலையிலும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பஞ்சாப் அரசு அவருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதே போல இந்திய கிரிக்கெட் வாரியம் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடியும், ஐபிஎல் அணியான சிஎஸ்கே ரூ.1 கோடியும் அறிவித்துள்ளன. இதுமட்டுமல்லாமல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புதிய சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். பிரபல விமான சேவை நிறுவனமான இண்டிகோ நீரஜ் சோப்ரா ஒரு வருடத்திற்கு இலவசமாக விமான பயணம் செய்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இந்த பட்டியல் இன்னும் நீண்டுக்கொண்டே செல்கிறது.

சூப்பர் சலுகை

சூப்பர் சலுகை

நீரஜ் சோப்ரா பரிசு மழையில் நினைந்துக்கொண்டிருக்கும் நிலையில் நீரஜ் என்ற பெயர் வைத்தவர்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள பாரச் நகரில் பெட்ரோல் பங்க் நடத்தி வருபவர் ஆயுப் பதான். இவர் சமீபத்தில் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதித்ததை கொண்டாடும் விதமாக நீரஜ் அல்லது சோப்ரா என பெயர் வைத்துள்ள அனைவருக்கும் ரூ.501 பெட்ரோல் இலவசமாக நிரப்பப்படும் என தெரிவித்தார். இந்த சலுகையானது இரண்டு நாட்களுக்கு வழங்கப்படவுள்ளது.

மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்

அவரின் இந்த அறிவிப்பாக பெட்ரோல் பங்க்-ல் கணிசமான அளவில் கூட்டம் குவியத்தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அட்டை என ஏதேனும் ஒரு ஆதாரத்தை காண்பித்தால், பெட்ரோல் இலவசமாக தரப்பட்டு வருகிறது. பங்க் உரிமையாளரின் இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்துள்ளனர்.

உற்சாக வரவேற்பு

உற்சாக வரவேற்பு

தங்க மகன் நீரஜ் சோப்ரா நேற்று நாடு திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது பேசிய அவர், இறுதிப் போட்டி நடைபெற்றபோது, முந்தைய த்ரோவை விட மிகச் சிறப்பாக நான் இன்னும் முன்னேற வேண்டும் என்பது தான் என் மனதில் ஒரே ஒரு விஷயம் இருந்தது. உடல் முற்றிலும் நன்றாக ஒத்துழைத்தது, நான் என்னால் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்த முடியும் என்று உணர்ந்தேன். என்னால் தேசிய சாதனையை முறியடிக்க முடியாவிட்டாலும், எனது தனிப்பட்ட திறமையைச் செய்ய முடியாவிட்டாலும், ஒலிம்பிக் தங்கம் வெல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது எனக்கூறினார். விரைவில் இவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார்.

Story first published: Tuesday, August 10, 2021, 19:55 [IST]
Other articles published on Aug 10, 2021
English summary
Gujarat petrol pump owner offering free petrol to people who share their names with Tokyo Olympics Gold medal winner Neeraj Chopra.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X