For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருக்காவது கவலை இருக்கா? கூடிய சீக்கிரம் கொரோனா நிலைமை இதுதான்.. அதிர வைத்த ஹர்பஜன் சிங்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

Recommended Video

England vs West Indies 3rd test preview

துவக்கத்தில் ஒவ்வொருவருக்கு ஏற்படும் பாதிப்பையும் கவனித்து வந்த மக்கள் நாளடைவில், இதுவும் வாழ்வில் ஒரு அங்கம் என்பது போல கண்டு கொள்ளாமல் செல்லும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் விரைவில் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு அதிகரிக்கும் என சுட்டிக் காட்டி அதிர வைத்துள்ளார்.

சச்சினுக்கு அப்புறம் கும்ப்ளேதான் கேப்டனாகி இருக்கணும்.. கங்குலி கேப்டன் ஆன ரகசியம்.. வெளியான உண்மை!சச்சினுக்கு அப்புறம் கும்ப்ளேதான் கேப்டனாகி இருக்கணும்.. கங்குலி கேப்டன் ஆன ரகசியம்.. வெளியான உண்மை!

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. லாக்டவுன் சமயத்தில் ஓரளவு கட்டுக்குள் இருந்த பாதிப்பு லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் கடுமையாக அதிகரித்து வருகிறது.

12 லட்சத்தை தாண்டி உள்ளது

12 லட்சத்தை தாண்டி உள்ளது

தினசரி பாதிப்பு இந்திய அளவில் 40,000த்தை தாண்டி உள்ளது. மொத்த பாதிப்பு 12 லட்சத்தை தாண்டி உள்ளது. இறப்பு எண்ணிக்கையும் ஒரு நாளுக்கு ஆயிரத்தை தொட்டுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து வருகிறது.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

இந்தியாவில் 4,26,000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை எடுத்த வண்ணம் உள்ளனர். இந்த செய்தியை பகிர்ந்துள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் யாராவது இதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

1 லட்சத்தை கடந்து விடும்

1 லட்சத்தை கடந்து விடும்

ஹர்பஜன் சிங் பதிவு - "இன்னும் கொஞ்ச நாட்களில் பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விடும். யாராவது இதைப் பற்றி கவலைப்படுகிறீர்களா?" என கேள்வி எழுப்பி உள்ளார். மக்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் தீவிரத்தை மறந்து விட்டதை சுட்டிக் காட்டி உள்ளது அவரது கேள்வி.

முன்னெச்சரிக்கை இல்லை

முன்னெச்சரிக்கை இல்லை

மார்ச், ஏப்ரலில் மக்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து வந்த நிலையில், லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் அவற்றை காற்றில் பறக்க விட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் ஒரு நாளுக்கு 1 லட்சம் பேர் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது என்பதே உண்மை.

Story first published: Thursday, July 23, 2020, 13:08 [IST]
Other articles published on Jul 23, 2020
English summary
Harbhajan Singh warns people about Coronavirus spread in India.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X