For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரட் பால் தெரியும்.. கேரட்டும் பாலும் தெரியுமா.. ஹீதர் கையில் என்ன இருக்கு பாருங்க

லண்டன்: கேரட்டை வைத்து டென்னிஸ் பந்தை அடிக்கும் ஒரு சவால் போட்டி. அதில் கலந்து கொண்டு புற்று நோயாளிகளுக்கான அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹீதர் நைட்.

கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவ பலரும் பலவிதமாக உதவிகளைக் குவித்து வருகின்றனர். ஒவ்வொரு துறையினரும் இதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் விளையாட்டுத்துறையினரும் நிறையவே உதவி செய்கின்றனர். அப்படித்தான் இப்போது இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹீதர் நைட் புற்று நோயாளிகளுக்கு உதவி செய்துள்ளார்.

கேரட்டும் பந்தும்

கேரட்டும் பந்தும்

உதவி செய்தாலும் அதை ஒரு சவால் மூலமாக செய்துள்ளார் ஹீதர் நைட். அதாவது கேரட்டை வைத்துக் கொண்டு டென்னிஸ் பந்தை விடாமல் அடிக்க வேண்டும். பந்து கீழே விழுந்து விடக் கூடாது. இதுதான் அந்த சவால். அந்த சவாலை ஏற்று பலரும் அதைச் செய்து பின்னர் ரூத் ஸ்டிராஸ் புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதியுதவி செய்துள்ளனர். அதேபோல இப்போது ஹீதர் நைட்டும் செய்துள்ளார்.

கீழே விழாமல் அடிக்கவும்

கீழே விழாமல் அடிக்கவும்

அதன்படி நீளமான ஒரு கேரட்டை எடுத்துக் கொண்ட ஹீதர் நைட், பிறகு டென்னிஸ் பந்தை அடிக்க ஆரம்பிக்கிறார். கீழே விழாமல் அடித்து முடித்த பின்னர் நான் சவாலில் ஜெயித்து விட்டேன். கூடவே இந்த உதவியையும் செய்யப் போகிறேன். நீங்களும் இதில் கலந்து கொண்டு அதில் ஜெயித்து பிறகு உதவிகளையும் செய்யுங்கள் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

தோழிகளுக்கு அழைப்பு

தோழிகளுக்கு அழைப்பு

இத்தோடு நில்லாமல் தனது சக விளையாட்டுத் தோழிகளான டேணியல் வியாட், கார்லி டெல்போர்ட், அலெக்ஸ் டென்சன் ஆகியோருக்கும் இந்த சவாலில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். நல்ல விஷயம்தான்.. பாராட்ட வேண்டிய ஒரு விஷயம்தான். இதே போல பலரும் கூட இந்த சவாலில் பங்கேற்று அதில் ஜெயித்து உதவிகளைச் செய்து வருகின்றனர்.

ரத்தான விளையாட்டு

ரத்தான விளையாட்டு

உலகம் முழுவதும் இந்த கொரோனாவைரஸால் தற்போது விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதி்க்கப்பட்டுள்ளன. முக்கியமான தொடர்களை ரத்து செய்து விட்டனர். பல போட்டித் தொடர்கள் தள்ளிப் போயுள்ளன. ஆனாலும் அவையெல்லாம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான். ஒலிம்பிக் போட்டியே அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போய் விட்டதுதான் பெரிய சோகமே.

Story first published: Friday, April 24, 2020, 10:24 [IST]
Other articles published on Apr 24, 2020
English summary
Heather Knight faced and won the rsf26challenge and called other players to participate
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X