For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசி நொடி வரை நகம் கடிக்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த இந்திய ஹாக்கி.. புது நம்பிக்கை!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தாலும் கூட.. ஹாக்கி என்ற விளையாட்டை இந்த ஒலிம்பிக் தொடர் மீண்டும் உயிர்ப்பித்து இருக்கிறது. இந்தியாவில் ஹாக்கிக்கான பழைய பெருமையை இந்த தொடர் மீட்டு எடுத்து வந்துள்ளது.

Recommended Video

ஒட்டுமொத்த India-வை திரும்பி பார்க்க வைத்த வீரர்கள்.. தோல்வியிலும் ஜெயித்த Indian Hockey

பழைய பன்னீர்செல்வமா வா.. என்று சத்திரியன் படத்தில் வரும் வசனத்தை போல இந்திய ஹாக்கி லெகசி மீண்டும் திரும்பி உள்ளது. ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் ஆடிய விதம் விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. 49 ஆண்டுகளுக்கு பின் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி செமி பைனலுக்கு தகுதி பெற்று இன்று பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி 5:2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி அடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது? 5 நொடியால் மாறிய ஆட்டம்.. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சோனம் மாலிக் தோல்வி.. என்ன நடந்தது?

தோல்வி

தோல்வி

இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி அடைந்து இருந்தாலும் கடைசி வரை களத்தில் இந்திய வீரர்கள் கடுமையாக போராடினார்கள். ஆட்டத்தின் தொடக்கத்தில் இந்தியாதான் பெல்ஜியத்திற்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியது. பெல்ஜியம் முதல் கோலை 2வது நிமிடத்திலேயே அடித்து இருந்தாலும் அடுத்தடுத்து ஏழு மற்றும் எட்டாவது நிமிடத்தில் இந்தியா இரண்டு கோல்களை அடித்தது.

 சமன்

சமன்

முதல் பாதியின் முடிவில் பெல்ஜியம் மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்டம் 2:2 என்ற கணக்கில் சமன் ஆனது. இரண்டாம் பாதியிலும் கூட ஆட்டம் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. மூன்றாம் கால் ஆட்டத்தில் இரண்டு அணிகளும் எந்த கோலும் அடிக்காத நிலையில், கடைசி கால் ஆட்டத்தில்தான் மொத்தமாக போட்டியே திசை மாறியது.

பெனால்டி கார்னர்

பெனால்டி கார்னர்

கடைசி கால் ஆட்டத்தில் பெல்ஜியத்திற்கு நிறைய பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. எதிரணி வீரர்களின் காலில் பந்துகளை அடித்து அதன் மூலம் பெனால்டி கார்னர் வாய்ப்பு பெறும் பழைய வித்தையை இன்று பெல்ஜியம் தங்களுக்கு தோதாக பயன்படுத்திக்கொண்டது. இதன் காரணமாக பெல்ஜியம் அணிக்கு கடைசி 15 நிமிடத்தில் மட்டும் 5 முறை பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.

எப்படி வெற்றி?

எப்படி வெற்றி?

இன்றைய போட்டியில் அதிகபட்சம் பெனால்டி கார்னர்மூலம்தான் பெல்ஜியம் வெற்றி பெற்றது. பெரும்பாலான பெனால்டி கார்னர் ஷாட்களை இன்று இந்தியாவின் கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுத்துவிட்டார். ஆனால் கடைசி 10 நிமிடத்தில் அடுத்தடுத்து வந்த பெனால்டி கார்னர் ஷாட்களால் நிலைகுலைந்த இந்தியா 5:2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

தோல்வி காரணம்

தோல்வி காரணம்

சின்ன சின்ன தவறுகள், லேசான சறுக்கல் இந்தியாவிற்கு இன்றைய போட்டியில் தோல்வியை அளித்தது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தாலும் கடைசி வரை ஒவ்வொரு வீரரும் களத்தில் போராடிய விதம் இந்திய விளையாட்டு ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. செமி பைனலில் தோற்று இருந்தாலும் கூட.. ஹாக்கி என்ற விளையாட்டு இன்று வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

பிரபலத்தை இழந்தது

பிரபலத்தை இழந்தது

இந்தியாவில் தயான் சந்த் காலத்தில் உச்சத்தில் இருந்த ஹாக்கி கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களை இழந்து அவ்வளவு பிரபலம் இல்லாத விளையாட்டாக மாறியது. அதிலும் கிரிக்கெட்டில் டி 20, ஐபிஎல் போன்ற புதுமைகள் காரணமாக இந்த பக்கம் ஹாக்கி, கால்பந்து போன்ற விளையாட்டுகள் வீழ்ச்சி அடைந்தன. ஹாக்கியின் வீழ்ச்சிக்கு கிரிக்கெட் ஒரு வகையில் மறைமுக காரணம் என்றாலும், இன்னொரு பக்கம் இந்திய ஹாக்கி வீரர்களும் காரணமாகவே இருந்தனர்.

ஆர்வம் குறைந்தது

ஆர்வம் குறைந்தது

சர்வதேச மேடைகளில் இந்திய ஹாக்கி அணி சரியாக ஆடாதது, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சர்வதேச அளவில் இந்தியாவிடம் ஆதிக்கம் செலுத்த கூடிய வீரர்கள் இல்லாதது என்று பல்வேறு காரணங்களால் இந்தியாவில் ஹாக்கி தனது மதிப்பை இழந்தது. முக்கியமாக கடந்த 40 வருடமாக ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியின் தொடர் தோல்விகள் அந்த போட்டியில் மக்கள் மீதான ஆர்வத்தை குறைத்தது.

உத்வேகம்

உத்வேகம்

ஆனால் இந்த ஒலிம்பிக் ஹாக்கி தொடர் இந்தியாவில் மீண்டும் ஹாக்கி என்ற விளையாட்டிற்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது. முக்கியமாக இதில் நாக் அவுட் போட்டிகள் ஹாக்கி போட்டி எவ்வளவு சுவாரசியம் மிக்கது என்பதை விளையாட்டு ரசிகர்கள் இடையே உணர்த்தி உள்ளது. முக்கியமாக இன்று நடந்த போட்டியின் கடைசி 10 நிமிடங்கள் இந்தியா கோல் போடுமா, போடாதா என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களை சீட் நுனியில் உட்கார்ந்து மேட்சை பார்க்க வைத்தது.

ரசிகர்களை கட்டிப்போட்டது

ரசிகர்களை கட்டிப்போட்டது

கடைசி நொடி வரை திரில்லாக சென்ற ஆட்டம் விளையாட்டு ரசிகர்களை கட்டிப்போட்டது. மன்தீப், ஹர்மன்தீப் சிங்கிங் கோல்கள், ஸ்ரீஜேஷின் கீப்பிங் என்று ஒவ்வொன்றையும் ரசிகர்கள் தனி தனியாக கவனித்து பாராட்டு அளவிற்கு இந்த தொடர் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் கிரிக்கெட் உலகில் கீப்பர்களுக்கு தனிப்பட்ட வகையில் ரசிகர்கள் இருப்பது போல இந்திய ஹாக்கி கீப்பர் ஸ்ரீஜேஷுக்கும் தற்போது பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டது.

 கொண்டாடியது

கொண்டாடியது

ஆண்கள் அணி மட்டுமல்ல காலிறுதி போட்டியில் பெண்கள் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்திய போதும் அதை இந்தியாவே சேர்ந்து கொண்டாடியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய பெண்கள் அணியின் குர்ஜித் கார் ஆடிய விதம், அவர் அடித்த அந்த ஒரு கோல், கீப்பர் சவிதா புனியாவின் தரமான கீப்பிங் என்று அனைத்தும் விளையாட்டு ரசிகர்களுக்கு இடையில் பெரிய கவனம் பெற்றது. இந்திய ஆண்கள் அணி செமி பைனலில் தோற்ற நிலையில் பெண்கள் அணியின் செமி பைனல் ஆட்டம் நாளை நடக்க உள்ளது. இதில் இந்தியா வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் கண்டிப்பாக இதை காண பல ரசிகர்கள் டிவி முன்பும், மொபைல் முன்பும் அமர்ந்து இருப்பார்கள். ஒவ்வொரு வீராங்கனைக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கில் டிவிட்டரில் நாளை வாழ்த்துக்கள் பறக்கும்.. இந்திய ஹாக்கியின் உண்மையான வெற்றியே அதுதான்!

Story first published: Tuesday, August 3, 2021, 12:41 [IST]
Other articles published on Aug 3, 2021
English summary
Olympics 2020 Hockey series revamped the Indians love for the game in the counrty after almost 40 years of the gap.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X