என்னை ஒரு கோச்சா பார்க்கலை... அதுக்கும் மேல... பிறந்தநாளில் விஸ்வநாதன் ஆனந்த் உற்சாகம்

சென்னை : ஐந்துமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் தன்னுடைய 51வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் தான் வழிகாட்டியாக செயல்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது குறித்து தான் திட்டமிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

14 நாட்கள்.. கடும் அவதி.. அவமானங்கள் அனைத்திற்கும் பதிலடி.. இன்று ரோஹித் சர்மாவிற்கு நடந்தது என்ன? 14 நாட்கள்.. கடும் அவதி.. அவமானங்கள் அனைத்திற்கும் பதிலடி.. இன்று ரோஹித் சர்மாவிற்கு நடந்தது என்ன?

51வது பிறந்தநாள்

51வது பிறந்தநாள்

ஐந்துமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தன்னுடைய 51வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இந்நிலையில் வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமி குறித்த தன்னுடைய கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

சிறப்பான வழிகாட்டி

சிறப்பான வழிகாட்டி

இதில் தான் கோச்சாக செயல்படவில்லை என்றும் ஒரு சிறப்பான வழிகாட்டியாகவே செயல்பட்டு அனைத்தையும் ஒருங்கிணைப்பதாகவும் ஆனந்த் குறிப்பிட்டார். மேலும் 10 வயது சிறுவர்களுடன் ஒப்பிடும்போது 4 முதல் 5 வயதினருக்கு வகுப்புகள் எடுப்பது மிகவும் சிரமம் என்றும் அவர் கூறினார்.

ஆன்லைன் பயிற்சிகள்

ஆன்லைன் பயிற்சிகள்

ஏறக்குறை 8 மாதங்களாக கொரோனா லாக்டவுனில் தான் ஆன்லைன் பயிற்சிகள், போன்றவற்றில் நேரத்தை உபயோகமாக கழித்ததாகவும், குடும்பத்தினருடன் அதிக நேரங்களை செலவழித்ததாகவும் சில பொழுதுபோக்குகளில் ஈடுபட்டதாகவும் ஆனந்த் மேலும் கூறினார்.

திட்டம் இல்லை

திட்டம் இல்லை

தொடர்ந்து தற்போது வரவேற்பை பெற்றுவரும் ஆன்லைன் வகுப்புகளை துவங்குவது குறித்து தான் இதுவரை திட்டமிடவில்லை என்றும் இதற்கென அதிக நேரங்களை ஒதுக்க வேண்டியதுவரும் என்றும் அவர் கூறினார். ஆனால் அதற்கான தேவை ஏற்பட்டால் அது குறித்து யோசிப்பேன் என்றும் அவர் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
I have been doing some speaking, some online courses in Lock down -Anand
Story first published: Friday, December 11, 2020, 14:37 [IST]
Other articles published on Dec 11, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X