For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷார்ஜாவில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் விளையாட்டு விழா: அசத்திய துபாய் அணி

By Siva

ஷார்ஜா: அமீரகத்தில் பல சேவைகளை ஆற்றி வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கடந்த 2.01.2015 அன்று ஷார்ஜா யுனிவர்சிட்டி மைதானத்தில் காலை முதல் மாலை வரை விளையாட்டு விழாவை வெகு சிறப்பாக நடத்தியது. இதில் திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.எம். மன்சூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் திரளாகக் கலந்து கொண்ட இந்த வண்ணமயமான விளையாட்டுப் போட்டிகளில் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன. துபாய் அணி வீரர்கள் கறுப்பு வண்ணமும், ஷார்ஜா அணி வீரர்கள் நீல வண்ணமும், அபுதாபி அணி வீரர்கள் சிவப்பு வண்ணமும் கொண்ட ஆடைகளை அணிந்திருந்தனர்.

கால்பந்து, கைப்பந்து, கபடி, கயிறு இழுத்தல், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தனித் தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. குழந்தைகள் அனைவருக்கும் கண்கவர் பரிசுகள் வழங்கப்பட்டது.

ICS conducts sports day in Sharjah: Dubai team emerges winner

விளையாட்டு வீரர்கள் அன்றைய தினம் முழுவதும் அனைத்துப் போட்டிகளிலும் ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்தனர். உத்வேகத்தோடு விளையாடினாலும் யாரும் கட்டுப்பாட்டை இழக்காமல் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

காலை முதல் மாலை வரை நடந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளின் அறிவிப்புகளையும், வர்ணனைகளையும் எம்.எஸ். அப்துல் ஹமீது, பத்தமடை முஹம்மது அலி ஆகியோர் செய்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வருமாறு,

கால்பந்து கோப்பை:

வெற்றிக் கோப்பை - அபுதாபி அணி

ரன்னர் கோப்பை - ஷார்ஜா அணி

கைப்பந்துக் கோப்பை:

வெற்றிக் கோப்பை - துபாய் அணி

ரன்னர் கோப்பை - ஷார்ஜா அணி

ICS conducts sports day in Sharjah: Dubai team emerges winner

கபடிக் கோப்பை:

வெற்றிக் கோப்பை - துபாய் அணி

ரன்னர் கோப்பை - அபுதாபி அணி

கயிறு இழுத்தல் போட்டி:

வெற்றிக் கோப்பை - துபாய் அணி

ரன்னர் கோப்பை - அபுதாபி அணி

ICS conducts sports day in Sharjah: Dubai team emerges winner

குண்டு எறிதல் போட்டி:

வெற்றிக் கோப்பை - ஜுபைர் (அபுதாபி)

ரன்னர் கோப்பை - தவ்ஃபீக் (துபாய்)

400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயம்:

வெற்றிக் கோப்பை - அபுதாபி அணி

ரன்னர் கோப்பை - துபாய் அணி

100 மீட்டர் ஓட்டப் பந்தய மெடல்கள்:

முதலிடம் - ராஜா முஹம்மது (துபாய்)

இரண்டாவது இடம் - ரிஸ்வான் (அபுதாபி)

மூன்றாவது இடம் - அன்வர் (துபாய்)

ஓவர்ஆல் சேம்பியன்ஷிப் கோப்பை

அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் துபாய் அணி ஓவர்ஆல் சேம்பியன்ஷிப் கோப்பையைத் தட்டிச் சென்றது.

ICS conducts sports day in Sharjah: Dubai team emerges winner

சிலம்பாட்டம்:

மாலையில் போட்டிகள் அனைத்தும் முடிந்ததும் மூன்று அணி வீரர்களும் அவரவருக்குரிய வண்ண உடையுடன் மைதானத்தில் அணிவகுத்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

அதன் பின்னர் பத்தமடை பொறியாளர் நாகூர் மீரான், நெல்லை ஏர்வாடி பொறியாளர் தவ்ஃபீக், நெல்லை ஏர்வாடி கவிஞர் பத்ர் ஸமான், மேலப்பாளயம் 'டெமோ' காஜா, பண்ருட்டி சுலைமான் ஆகியோர் அணி வகுத்து அமர்ந்த அணி வீரர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் வீர விளையாட்டான சிலம்பாட்டம் ஆடினர். இது காண்போர் அனைவரையும் கவர்ந்தது.

பரிசளிப்பு விழா:

இறுதியாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ் மண்டல பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபோரம் (EIFF) தமிழ் மாநிலத் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வாழத்துரை வழங்கினார். அடுத்ததாக, அன்றைய மதிய உணவுக்கு அனுசரணை வழங்கிய "சுகி ரெஸ்டாரண்ட்" உரிமையாளர் அசதுல்லாஹ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் பி.எம். மன்சூர் ஸாகிப் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மன்சூர் ஸாகிப், "சுகி ரெஸ்டாரண்ட்" உரிமையாளர் அசதுல்லாஹ், "ஐ கிரேடு" நிறுவன உரிமையாளர் முஹம்மத் ஃபர்வீஸ், இஐஎப்எப் தலைவர் ஜெய்னுல் ஆபிதீன், இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி பொதுச் செயலாளர் வலசை ஃபைஸல், எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் ஹமீது ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும், அணி வீரர்களுக்கும் பரிசுகளையும், கோப்பைகளையும், மெடல்களையும் வழங்கினர்.

பெண்களுக்கான பரிசுகள் அவர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவை பொறியாளர் தமீம் மன்சூர் அவர்கள் சிறப்புற நெறிப்படுத்தி, தொகுத்து வழங்கினார். இறுதியில் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் நன்றியுரை நவில, பிரார்த்தனையுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுற்றன.

இந்த விளையாட்டு விழா ஒருங்கிணைப்பாளரான அபுதாபி ஃபெரோஸ்கான் அவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் மிக நேர்த்தியாக திறம்பட செய்திருந்தார். பார்வையாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவை வழங்கப்பட்டன.

தன்னலமின்றி உழைத்த தன்னார்வத் தொண்டர்கள் காலை முதல் மாலை வரை சுழன்று சுழன்று பணியாற்றி அனைத்து ஏற்பாடுகளையும் திறம்பட செய்து பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

Story first published: Monday, January 5, 2015, 10:17 [IST]
Other articles published on Jan 5, 2015
English summary
Indian cultural society conducted sports day in Sharjah on january 2nd. Dubai team got the overall championship trophy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X