For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெஸ்லிங் ஆடுனது போதும்.. அடுத்து மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ்.. சீனாவில் இந்திய வீராங்கனை ரிது போகத்!

புதுடெல்லி : பீஜிங்கின் காடிலாக் அரேனாவில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் இந்தியாவின் ரிது போகத் முதல்முறையாக களமிறங்க உள்ளார்.

25 வயதான ரிது போகத், கொரிய வீராங்கனை நம் ஹீ கிம்முடன் இந்தப் போட்டியில் மோதவுள்ளார். முழு மனதுடன் தான் இந்த பிரிவில் பங்கேற்வுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் உலக சாம்பியன் பட்டம் பெறுவதே தனது கனவு என்று தெரிவித்துள்ள அவர், அதற்கெனவே தான் தற்போது தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

 எதிராளியை தாக்கும் சூட்சமம்

எதிராளியை தாக்கும் சூட்சமம்

ஹரியானாவை சேர்ந்த ரிது போகத் 2016 காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றவர். மல்யுத்த போட்டிகளில் களமிறங்கிவிட்டால், அவரது ஒவ்வொரு தாக்குதலையும் எதிர்கொள்ள எதிரே உள்ளவர் கலங்கித்தான் ஆக வேண்டும்.

 மல்யுத்தத்தில் கலக்கும் கூட்டணி

மல்யுத்தத்தில் கலக்கும் கூட்டணி

ரிது போகத் மட்டுமல்ல இவரது சகோதரிகள் மற்றும் சித்தப்பா மகள்களும் மல்யுத்த போட்டிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை போகத் சகோதரிகள் என்று இந்திய ரசிகர்கள் பெருமையுடன் அழைக்கின்றனர்.

 ஆசிய மல்யுத்த போட்டியில் வெண்கலம்

ஆசிய மல்யுத்த போட்டியில் வெண்கலம்

காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ள ரிது போகத், உலக யூ23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலமும் பெற்றுள்ளார். மேலும் தேசிய அளவில் பல பதக்கங்களையும் அவர் குவித்துள்ளார்.

 ரிதுவின் விருப்பம்... கனவு...

ரிதுவின் விருப்பம்... கனவு...

இந்நிலையில் சீனாவின் பீஜிங்கில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஆடம்வெயிட் போட்டியில் கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் தன்னை எதிர்த்து போட்டியிடும் கொரியாவின் நம் ஹீ கிம்முடன் ரிது போகத் மோதவுள்ளார்.

 உலக சாம்பியன் ஆவதே கனவு

உலக சாம்பியன் ஆவதே கனவு

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரிது போகத், கலப்பு தற்காப்புக் கலை போட்டிகளில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதே தனது ஆசை மற்றும் லட்சியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். அதற்கென தான் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 முதல் இந்திய பெண்ணாக களமிறங்க விருப்பம்

முதல் இந்திய பெண்ணாக களமிறங்க விருப்பம்

தன்னுடைய முழு விருப்பத்துடன் தான் இதில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்துள்ள ரிது போகத், கலப்பு தற்காப்புக் கலை போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் பெறுவதே தன்னுடைய குறிக்கோள் என்றும் கூறியுள்ளார்.

"இது பெருமைக்குரிய விஷயம்"

இந்தியாவின் சார்பில் தான் விளையாடுவதை பெருமைக்குரிய விஷயமாக தெரிவித்துள்ள ரிது, இதன்மூலம் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக தான் விளங்குவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, November 14, 2019, 20:09 [IST]
Other articles published on Nov 14, 2019
English summary
Indias wrestler Ritu phogat makes her debut in mixed martial arts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X