For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018 ஆசிய விளையாட்டில் என்ன செய்தது இந்தியா? தடகளம், ஷூட்டிங் டாப்.. கபடி, ஹாக்கி சறுக்கல்

டெல்லி : இந்தியா 2018இல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 69 பதக்கங்கள் வென்று அசத்தியது.

கடந்த காலங்களை விட இந்தியா விளையாட்டுத் துறையில் முன்னேறி இருக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்தது இந்த விளையாட்டுத் தொடர்.

இந்தியா சார்பில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018இல் 277 ஆண்கள், 247 பெண்கள் என மொத்தம் 524 வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்கள் மொத்தமாக 36 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்றனர்.

தடகளம் அதிகம்

தடகளம் அதிகம்

தடகளத்தில் தான் இந்தியா அதிக வீரர்களை களம் இறக்கியது. அதற்கேற்ப அதிக பதக்கங்களும் அந்த பிரிவில் இருந்தே கிடைத்தது. தடகளத்தில் 19 பதக்கங்கள் வென்றது இந்தியா. இதில் 7 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலம் அடங்கும்.

துப்பாக்கி சுடுதல் அசத்தல்

துப்பாக்கி சுடுதல் அசத்தல்

அடுத்த இடத்தில் துப்பாக்கி சுடுதல் இடம் பெற்றது. அதில் 9 பதக்கங்கள் வென்றது இந்தியா. மேலும், பல விளையாட்டுக்களில் முதன் முறையாக பதக்கம் வென்றும் அசத்தினர் இந்திய வீரர்கள். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தன் பிரிவில் முதல் தங்கம் வென்று கொடுத்தார்.

ஹெப்டாத்லான்-இல் முதல் தங்கம்

ஹெப்டாத்லான்-இல் முதல் தங்கம்

அதே போல ட்ரிபுள் ஜம்ப்பில் அர்பிந்தர் சிங் மற்றும் மகளிர் ஹெப்டாத்லான்-இல் ஸ்வப்னா பர்மன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று தங்கள் பிரிவுகளில் முதல் தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தனர்.

புதிய விளையாட்டுக்களில் பதக்கம்

புதிய விளையாட்டுக்களில் பதக்கம்

இந்தியா இதுவரை பதக்கம் வெல்லாத பல விளையாட்டுக்களில் பதக்கம் வென்று அசத்தியது. ஈக்குவெஸ்டேரியன், செய்லிங், குராஷ், வுஷு, செபக்டக்ராவ், பிரிட்ஜ் உள்ளிட்ட பல போட்டிகளில் பதக்கம் வென்றனர் இந்திய வீரர்கள்.

கபடி, ஹாக்கி அதிர்ச்சி

கபடி, ஹாக்கி அதிர்ச்சி

கபடி மற்றும் ஹாக்கி அணியினர் தங்கம் வெல்வார்கள் என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அந்த இரண்டு விளையாட்டிலும் இந்தியாவிற்கு அதிர்ச்சித் தோல்விகள் கிடைத்தன. ஆடவர் ஹாக்கி மற்றும் ஆடவர் கபடி அணிகள் வெண்கலமும், மகளிர் கபடி அணி வெள்ளியும் மட்டுமே வென்றது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 15 தமிழக வீரர்கள் மொத்தமாக 21 பதக்கம் வென்று அசத்தினர்.

எட்டாம் இடம் பிடித்த இந்தியா

எட்டாம் இடம் பிடித்த இந்தியா

இந்தியா ஒட்டு மொத்தமாக 69 பதக்கங்கள் வென்றது. அதில் 15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 30 வெண்கலப் பதக்கங்கள் ஆகும். பதக்கப் பட்டியலில் இந்தியா எட்டாம் இடம் பிடித்தது. முதல் மூன்று இடங்களில் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா இடம் பிடித்தன.

Story first published: Saturday, December 29, 2018, 16:22 [IST]
Other articles published on Dec 29, 2018
English summary
India’s Medal hunt at 2018 Asian Games is an highlight in Indian sports. India Won 69 medals in this edition of Asian games.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X