For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடிவுக்கு வந்தது காமன்வெல்த் போட்டிகள்.. பதக்க மழை பொழிந்த இந்தியர்கள்.. மொத்தம் எத்தனை பதக்கங்கள்?

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டிகளில் இந்திய அணி வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் நடைபெற்று வந்த காமன்வெல்த் 2022 போட்டிகள் முடிவுக்கு வந்தவிட்டது.

கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் இன்றுடன் முடிவடைந்தது.

 ஏன் இந்த விபரீத முடிவு??.. ஆசியக்கோப்பைக்காக பலவீனமான இந்திய அணி.. ரசிகர்கள் கடும் அதிருப்தி! ஏன் இந்த விபரீத முடிவு??.. ஆசியக்கோப்பைக்காக பலவீனமான இந்திய அணி.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!

போட்டி விவரங்கள்

போட்டி விவரங்கள்

காமன்வெல்த் வரலாற்றிலேயே அதிகப்படியான வீரர், வீராங்கனைகள் இந்தாண்டு கலந்துக்கொண்டனர். 72 நாடுகளில் இருந்து மொத்தமாக 5,054 பேர் கலந்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. தடகளம், மல்யுத்தம், நீச்சல், குத்துச்சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட 280 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.

யார் முதலிடம்

யார் முதலிடம்

அதன்படி வழக்கம் போல ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தமாக 178 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்து 176 பதக்கங்களை வென்று ( 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் ) 2வது இடத்தை பிடித்துள்ளது. 3வது இடத்தில் கனடா 92 பதக்கங்களுடன் உள்ளது.

இந்தியாவின் பதக்க எண்ணிக்கை

இந்தியாவின் பதக்க எண்ணிக்கை

இந்தியா 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது. இந்தியாவுக்கு அதிகப்படியாக மல்யுத்தத்தில் இருந்து 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பளுதூக்குதலில் இருந்து இந்தியாவுக்கு 12 பதக்கங்களும், தடகளத்தில் இருந்து 8 பதக்கங்களும் வந்துள்ளன. டேபில் டென்னிஸில் 4 பதக்கங்கள் வந்துள்ளன.

ஒரு குறை

ஒரு குறை

இந்தாண்டு இந்திய அணிக்கு துப்பாக்கிச் சுடுதலில் இருந்து பதக்கங்கள் கிடைக்காதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கிச்சுடுதல் வீரர், வீராங்கனைகள் மட்டுமே 16 பதக்கங்களை வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, August 10, 2022, 16:48 [IST]
Other articles published on Aug 10, 2022
English summary
India’s final medal tally in Birmingham Commonwealth games 2022
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X