For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

India’s schedule Tokyo Olympics Aug 5: சாதிக்குமா ஆண்கள் ஹாக்கி அணி? ரவிக்குமார் தங்கம் வெல்வாரா?

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்றைய 13வது நாள், இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. குறிப்பாக, பெண்கள் ஹாக்கி போட்டியில் அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது.

இந்திய பெண்கள் ஹாக்கி அணி அரையிறுதி வரை முன்னேறும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. முதன் முறையாக இந்த மைல்கல்லை இந்தியா எட்டியது. இதனால், இன்றைய போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

India’s schedule at Tokyo Olympics 2020 for 5th August day 14

ஆனால், அர்ஜென்டினா அணியுடன் மோதிய இந்தியா, 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. எனினும், வரும் ஆகஸ்ட்.6ம் தேதி நடக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், பிரிட்டன் அணியுடன் இந்தியா மோதுகிறது. எனினும், நாளை (ஆகஸ்ட்.5) வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

நாளைய போட்டியில் குறிப்பிடத்தகுந்த மற்றொரு போட்டி, ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ தங்கப் பதக்கப் போட்டியாகும். இதில், இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா Zaur உகுவேவ்-ஐ எதிர்கொள்கிறார். இதில், ரவி தங்கம் வென்றால், ஒலிம்பிக் தொடரில் தனி நபர் பிரிவில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற 2வது வீரர் எனும் பெருமையை அபினவ் பிந்த்ராவுக்கு (துப்பாக்கிச் சுடுதல்) பிறகு பெறுவார்.

சரி.. நாளை (ஆக.5) அதாவது ஒலிம்பிக்கின் 14வது நாளில் இந்தியா பங்கேற்கவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.

தடகளம்

ஆண்களுக்கான 20 கிமீ race walk இறுதிப் போட்டி: இந்தியா சார்பில் KT இர்பான், ராகுல் ரோஹில்லா, சந்தீப் குமார் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இந்திய நேரப்படி இப்போட்டி மதியம் 1:00 மணிக்கு தொடங்குகிறது.

India’s schedule at Tokyo Olympics 2020 for 5th August day 14

கோல்ஃப்

பெண்கள் சுற்று 2: அதிதி அசோக் - இந்திய நேரப்படி இப்போட்டி அதிகாலை 5:55 மணிக்கு தொடங்குகிறது.

பெண்கள் சுற்று 2: தீக்ஷா தாகர் - இந்திய நேரப்படி இப்போட்டி காலை 7:39 மணிக்கு தொடங்குகிறது.

ஹாக்கி

ஆண்கள் வெண்கலப் பதக்கம் போட்டி: ஜெர்மனி vs இந்தியா - இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

India’s schedule at Tokyo Olympics 2020 for 5th August day 14

மல்யுத்தம்

பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ, சுற்று 16: வினேஷ் போகத் Vs சோஃபியா மேட்சன் - காலை 8:00 மணி

மகளிர் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ கால் இறுதி: வினேஷ் போகத் வெற்றி பெற்றால்

பெண்கள் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ அரை இறுதி: வினேஷ் போகத் வெற்றி பெற்றால்

பெண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ repechage: அன்ஷு மாலிக் Vs வலேரியா கோப்லோவா

ஆண்கள் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ தங்கப் பதக்கப் போட்டி: ரவிக்குமார் தஹியா vs Zaur உகுவேவ் - மாலை 4:20 மணிக்கு நடைபெறுகிறது

ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 86 கிலோ வெண்கலப் பதக்கப் போட்டி: தீபக் புனியா vs ரெப்சேஜ் repechage - மாலை 4:20 மணிக்கு நடைபெறுகிறது

8 வருட போராட்டம்.. ஒலிம்பிக்கில் கிடைத்த ஏமாற்றம்.. மனம் கலங்கிய லாவ்லினா! 8 வருட போராட்டம்.. ஒலிம்பிக்கில் கிடைத்த ஏமாற்றம்.. மனம் கலங்கிய லாவ்லினா!

Story first published: Wednesday, August 4, 2021, 21:48 [IST]
Other articles published on Aug 4, 2021
English summary
India’s schedule at Tokyo Olympics 5th August - ஒலிம்பிக்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X