For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீராங்கனை சுதா சிங்கிற்கு ஜிகா வைரஸ் தாக்குதல்?

பெங்களூரு: ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்று இந்திய திரும்பியுள்ள தடகள வீராங்கனை சுதா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் ஜிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் முடிந்த ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் தடகள போட்டியில் பங்கேற்றார் சுதா சிங். 3000 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் பங்கேற்ற சுதா சிங் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து, கடந்த 20ம் தேதி சுதா நாடு திரும்பினார்.

Indian athlete Sudha Singh admitted to hospital after returning from Rio

வரும் போதே அவருக்கு காய்ச்சலும் உடல் வலியும் இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, இந்திய விளையாட்டு ஆணையத்தின் மண்டல இயக்குநர் ஷியாம் சுந்தர், சுதா சிங் ஜிகா வைரஸ்சால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்றும் இதனால் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சுதா சிங்கிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரி, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொசுவின் மூலம் பரவக் கூடிய ஜிகா வைரஸ் மிக மோசமானது என்கின்றனர் மருத்துவர்கள்.

Story first published: Tuesday, August 23, 2016, 13:08 [IST]
Other articles published on Aug 23, 2016
English summary
Indian athlete Sudha Singh, who had participated in the Women's 3000m steeplechase category, has been admitted to the hospital for a suspected Zika Virus.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X