12 வயதில் "கிராண்ட் மாஸ்டர்".. 19 வருட ரெக்கார்டு.. ஊதித் தள்ளிய இந்திய வம்சாவளி சிறுவன்

ஹங்கேரி: அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் பனிரெண்டு வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளான்.

ஹங்கேரி தலைநகர் புத்தபிஸ்ட் நகரில் 'உலக கிராண்ட் மாஸ்டர்' சதுரங்கப் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.

"4 ஓவருக்கே நாக்கு தள்ளுறாங்க".. ஒரு பிரயோஜனமும் இல்ல.. இந்திய பவுலர்களுக்கு கபில்தேவ் "பொளேர்"

இதில், இந்தியாவின் லியோன் மெண்டோன்கா மற்றும் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவனான அபிமன்யு மிஸ்ரா ஆகியோர் மோதினர்.

12 வயது 4 மாதம்

12 வயது 4 மாதம்

லியோன் மெண்டோன்கா (Leon Luke Mendonca) இந்தியாவின் 67வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆவார். இதனால், இப்போட்டி மிகுந்த சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. எனினும், இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய அபிமன்யு மிஸ்ரா, இந்திய வீரர் லியோனை வீழ்த்தி வெற்றிப் பெற்றார். அதுமட்டுமின்றி, உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற புதிய சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, 12 வயது 4 மாதங்கள் 25 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

முறியடித்த மிஸ்ரா

முறியடித்த மிஸ்ரா

இதற்கு முன்பாக, ரஷ்யாவை சேர்ந்த செர்கே கர்ஜாகின் (Sergey Karjakin) 12 வயது 7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதே கடந்த 19 ஆண்டுகளாக அசைக்க முடியாத சாதனையாக இருந்து வந்தது. இதனை தற்போது அபிமன்யு மிஸ்ரா முறியடித்திருக்கிறார். புத்தபிஸ்ட் நகரில் பல மாதங்கள் தங்கியிருந்து பல்வேறு போட்டித் தொடர்களில் விளையாடி இந்த சாதனையை மிஸ்ரா படைத்துள்ளார்.

இந்தியர் ஒருவரால்

இந்தியர் ஒருவரால்

இந்நிலையில், முறியடிக்கப்பட்ட சாதனை குறித்து செர்ஜி கார்ஜாகின் அளித்துள்ள பேட்டியில், "20 ஆண்டுகள் என்பது மிக நீளமானது. நிச்சயம் இது முறியடிக்கப்பட வேண்டிய சாதனை தான். இது நிச்சயம் நடந்தே தீரும் என எண்ணினேன். குறிப்பாக, இந்தியர் ஒருவரால் எனது சாதனை முன்னரே முறியடிக்கப்படும் என்றே கணித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

4 இடங்களில் இந்தியர்கள்

4 இடங்களில் இந்தியர்கள்

மேலும், இந்த சாதனையை படைத்துள்ள மிஸ்ராவுக்கு அவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். மிஸ்ரா எதிர்காலத்தில் பெரிய சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார் என்றும் வாழ்த்தியுள்ளார். இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் 4 இடங்களை இந்தியர்கள் ஆக்கிரமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: mishra chess
English summary
Indian origin Abhimanyu Mishra Grandmaster - அபிமன்யூ மிஸ்ரா
Story first published: Thursday, July 1, 2021, 13:52 [IST]
Other articles published on Jul 1, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X