காமன்வெல்த் போட்டிகள்.. பதக்கமழை பொழியும் இந்தியர்கள்.. சாதனையுடன் கூடிய வெற்றிகள் - முழு பட்டியல்

பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சாதனையுடன் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

Recommended Video

IND vs AUS Final கொரோனா பாதித்த வீராங்கனைக்கு விளையாட அனுமதி *Cricket

பிர்மிங்கமில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டி வருகிறது.

இந்த போட்டியின் 10வது நாளான இன்று தடகளம், குத்துச்சண்டை, ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் சாதனையுடன் கூடிய பதக்கங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகின்றனர்.

வாக்கை காப்பாறிய ரோகித் சர்மா.. 4வது டி20 போட்டியில் ரசிகர்களுக்கு இருந்த ட்விஸ்ட்.. டிராவிட் குஷி! வாக்கை காப்பாறிய ரோகித் சர்மா.. 4வது டி20 போட்டியில் ரசிகர்களுக்கு இருந்த ட்விஸ்ட்.. டிராவிட் குஷி!

மகளிர் ஹாக்கி

மகளிர் ஹாக்கி

இன்று முதலாவதாக நடைபெற்ற மகளிர் ஹாக்கியின் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி 1- 1 என சமன் செய்தது. இதன்பின்னர் ஷூட் அவுட் முறை நடத்தப்பட்டது. அதில் 2 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்று, வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தது.

மேலும் 2 தங்கம்

மேலும் 2 தங்கம்

இதன் பின்னர் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் ஆண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கால், 5-0 என்ற கணக்கில் தங்கப்பதக்கம் வென்றார். இதே போல மகளிருக்கான 48 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை நீத்து 5- 0 என்ற கணக்கில் தங்கம் வென்றார். இதன் மூலம் குத்துச்சண்டையில் இன்று 2 தங்கங்கள் கிடைத்தன.

பி.வி.சிந்து அசத்தல்

பி.வி.சிந்து அசத்தல்

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகளிர் பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். அரையிறுதியில் சிங்கப்பூரின் ஜியா மின் என்ற வீராங்கனையை எதிர்கொண்ட அவர், 21-19, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

தடகளத்தில் சாதனை

தடகளத்தில் சாதனை

இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் எல்டோஸ் பால் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். காமன்வெல்த் தொடரில் முதல்முறையாக 17.03 மீட்டர் தூரத்தை தாண்டிய வீரர் என்ற பெருமைபெற்றார். இதே போட்டியில் மற்றொரு இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

பதக்க எண்ணிக்கை

பதக்க எண்ணிக்கை

இதன் மூலம் இந்திய அணியின் பதக்கங்கள் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா 16 தங்கம், 12 வெள்ளி, 19 வெண்கலம் என மொத்தமாக 47 பதக்கங்களுடன் 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா 161 பதக்கங்களுடனும், இங்கிலாந்து 156 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
India medals in Commonwealth games 2022 ( காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் பதக்கம் ) காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வருகின்றனர்
Story first published: Sunday, August 7, 2022, 18:42 [IST]
Other articles published on Aug 7, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X