For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசிய விளையாட்டு: மகளிர் கபடி போட்டியில் இந்தியாவுக்கு தங்கம்!

By Mathi
Indian women kabbadi team won Gold
இன்ச்சியான்: ஆசிய விளையாட்டு மகளிர் கபடிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் ஈரானை 30-21 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.

தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பெண்கள் கபடி இறுதிப் போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.

வழக்கம் போல இந்திய வீராங்கனைகள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். ஈரான் அணியினரும் சளைக்காமல் பதிலடி கொடுத்தனர்.

முதல் பாதி முடிவில் 15-10 என இந்திய அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடந்த 2வது பாதியில் இந்திய வீராங்கனைகள் ஜொலித்தனர்.

ஆட்டத்தின் இறுதியில் இந்திய பெண்கள் அணி 31-21 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

கடந்த 2010 ஆசிய விளையாட்டினை தொடர்ந்து 2வது முறையாக, இந்திய பெண்கள் கபடி அணி, தங்கம் வென்றது.

மொத்தம் 10 தங்கப்பதக்கங்களுடன் இந்தியா பதக்கப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Story first published: Friday, October 3, 2014, 8:47 [IST]
Other articles published on Oct 3, 2014
English summary
India women beat Iran 31-21 to win their second successive Asiad gold medal.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X