For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளே “அபிதா ஏசியன் கேம்ஸ்”... இந்தோனேசிய தம்பதி சூட்டிய பெயரைப் பாருங்கள்

பாலெம்பங் : இந்தோனேசியாவில் பாலெம்பங் நகரில் உள்ள ஒரு தம்பதி தங்கள் பெண் குழந்தைக்கு "அபிதா ஏசியன் கேம்ஸ்" என பெயரிட்டு வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

ஏற்கனவே, குழந்தைக்கு முதல் பெயரை தேர்வு செய்த விட்ட அவர்கள் கடைசி பெயரை (Last Name), ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தங்கள் ஊரில் நடப்பதை பெருமையாக கருதி, "ஏசியன் கேம்ஸ்" என்றே வைத்து விட்டனர்.

 Indonesian baby named as Abidah Asian Games in memory of Asian games

இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலெம்பங் ஆகிய இரு நகரங்களில் ஆகஸ்ட் 18 தொடங்கி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இரண்டு நகரங்களில் போட்டி நடத்தினால் இரண்டு நகரங்களும் வளர்ச்சி அடையும் என்ற நோக்கத்தில் இந்தோனேசிய அரசு பாலெம்பங் நகரிலும் சில போட்டிகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதனால், இந்த நகர மக்கள் அதிக பெருமை கொண்டு இருக்கிறார்கள். அங்கே இந்த ஆசிய விளையாட்டு தொடர்போடு பல வியாபாரங்களும், விளம்பரங்களும் களை கட்டி வருகிறது.

[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]

இந்தோனேசியாவில் பொதுவாக ஒரு பெயர் மட்டுமே வைக்கப்படுகிறது. தந்தை பெயரையோ, குடும்பப் பெயரையோ கூட தங்கள் பெயரோடு அவர்கள் இணைத்துக் கொள்வதில்லை. எனினும், தங்கள் குழந்தைக்கு இரண்டாவது பெயராக ஏசியன் கேம்ஸ் என சூட்டி மகிழ்ந்துள்ளனர் இந்த இந்தோனேசிய தம்பதி.

தங்கள் நகரத்தில் நடக்கும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த விளையாட்டு தொடரின் பெயரை, தங்கள் குழந்தைக்கு சூட்டியதோடு மட்டுமில்லாமல், இந்த குழந்தைக்கு எதிர்காலத்தில் விளையாட்டில் ஈடுபட விருப்பம் இருந்தால் தாங்கள் அவளை ஊக்கப்படுத்துவோம் என்றும் கூறுகின்றனர்.

எதிர்காலத்தில் "அபிதா ஏசியன் கேம்ஸ்", ஏசியன் கேம்ஸிலா, ஒலிம்பிக்கிலோ பதக்கம் வென்றாலும் ஆச்சரியமில்லை.

Story first published: Monday, August 27, 2018, 12:40 [IST]
Other articles published on Aug 27, 2018
English summary
Indonesian baby in Palembang named as "Abidah Asian Games" in memory of Asian games hosted in their city.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X