For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லட்ச ரூபாய் பரிசுக்கு பதில் பொக்கே.. இந்திய ஒலிம்பிக் சங்கம் செய்த காமெடி

டெல்லி : நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுப் பணம் வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் பல தவறுகள் செய்து, பரிசு வழங்கும் விழாவை காமெடி விழாவாக மாற்றி உள்ளனர் விழா ஏற்பாட்டாளர்கள். மத்திய விளையாட்டு அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் முன்னிலையில் தான் அந்த தவறுகள் அனைத்தும் நடந்தேறியது.

பல வீரர்களும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அப்படி என்ன தான் பரிசு விழாவில் காமெடி செய்தார்கள்?

செக்கில் பெயர் தவறு

செக்கில் பெயர் தவறு

நேற்று நடந்த பரிசு விழாவில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பதக்கத்துக்கு ஏற்ப பல லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. தனி விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு 5 லட்சம், 3 லட்சம், 2 லட்சம் என பரிசு வழங்கப்பட்டது. குழு விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு 3 லட்சம், 2 லட்சம், 1 லட்சம் என பரிசு வழங்கப்பட்டது. இதில் சுமார் 15 வீரர்களின் பெயர்களை செக்கில் தவறாக எழுதி உள்ளனர். இதனால், வீரர்கள் அந்த செக்குகளை வங்கியில் செலுத்தி பணமாக மாற்ற முடியாது.

செக் இல்லை..பொக்கே மட்டும்

செக் இல்லை..பொக்கே மட்டும்

இதை கடைசி நேரத்தில் அறிந்த விழா நிர்வாகிகள், தவறான பெயர் இருந்த செக்குகளை வீரர்களுக்கு வழங்கவில்லை. அதற்கு பதில் அந்த 15 வீரர்களுக்கு பொக்கே மட்டும் வழங்கினர். அந்த வீரர்களுக்கு விரைவில் சரியான பெயர் கொண்ட செக்குகள் வழங்கப்படும் என கூறினர் நிர்வாகிகள்.

எனக்கு பொக்கே கூட இல்லையா?

எனக்கு பொக்கே கூட இல்லையா?

இதில் மற்றொரு காமெடியாக, மல்யுத்த வீராங்கனை திவ்யா காக்ரன் பெயர் அழைக்கப்படவில்லை. மற்ற வீரர்களுக்கு பரிசு (பொக்கேவும்) வழங்கிய அமைச்சர் ரத்தோர் கிளம்பி வாசலுக்கு சென்ற நிலையில், அவரை மீண்டும் அழைத்து வந்து திவ்யா காக்ரனுக்கு பரிசு வழங்கினர். இப்படி பயங்கர காமெடி செய்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம்.

பணமே ஓசி தான்

பணமே ஓசி தான்

இந்திய ஒலிம்பிக் சங்கம் இதுவரை பதக்கம் வென்ற வீரர்களுக்கு பணப் பரிசு கொடுத்ததில்லை என்பது தான் இதில் முக்கியம். இதுவே முதல் முறையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பணம் வழங்கும் விழா. இந்த வருடம் மட்டும் வீரர்களுக்கு பணம் கொடுக்க மனம் வந்துவிட்டதா?. மனம் வந்ததோ, இல்லையோ பணம் கொடுக்க ஸ்பான்சர்கள் கிடைத்து விட்டார்கள். அதை அடுத்தே இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

Story first published: Monday, September 24, 2018, 12:09 [IST]
Other articles published on Sep 24, 2018
English summary
IOA gave bouquets to medal winners instead of cheque, as many names are misspelt.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X