For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க ஆதரவு ரொம்ப முக்கியமானது.. நன்றி.. மோடிக்கு தேங்ஸ் சொன்ன ஐஓசி

லாசேன்: பிரதமர் நரேந்திர மோடிக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்க தலைவர் தாமஸ் பேச் நன்றி தெரிவித்துள்ளார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பான முடிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு ஆதரவாக இருந்தமைக்காக இந்த நன்றியை அவர் கூறியுள்ளார்.

Recommended Video

Records by Rohit Sharma that tough to break

டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டி கொரோனாவைரஸ் பரவல் காரணமாக அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளது.

இதனால் விளையாட்டு வீர்ரகள் பலரும் ஏமாற்றமடைந்துள்ளனர். ஆனால் சூழல் சரியில்லாததால் இந்த முடிவே சரியானது என்று அனைவரும் வரவேற்றுள்ளனர்.

மோடிக்கு கடிதம்

மோடிக்கு கடிதம்

இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டுத் தலைவருக்கும் ஐஓசியின் தலைவர் தாமஸ் பேச் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தங்களுக்கு ஆதரவாக இருப்பது குறித்து அதில் அவர் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்து எழுதியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் பேச்சு

காமன்வெல்த் மாநாட்டில் பேச்சு

அந்தக் கடிதத்தில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பாக சமீபத்தில் நடந்த காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டின்போது ஐஓசிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்காக எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒலிம்பிக் சங்கத்தின் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவாக இந்தியா இருப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அபே சொல்லி தள்ளிப் போட்டனர்

அபே சொல்லி தள்ளிப் போட்டனர்

முன்னதாக போட்டியை தள்ளி வைப்பது தொடர்பாக முதலில் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் யோசனையில் இருந்தது. இருப்பினும் ஜப்பான் பிரதமர் அபே, பேச்சுடன் தொலைபேசியில் நடத்திய ஆலோசனையின்போது போட்டியைத் தள்ளி வைப்பதே நல்லது என்று எடுத்துரைத்தார். இதையடுத்து போட்டியை தள்ளி வைக்க ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்தது. இதனால் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளது.

2021ல் நடக்கும்

2021ல் நடக்கும்

திருத்தியமைக்கப்பட்ட பட்டியலின்படி 2021ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஆயினும் டோக்கியோ 2020 என்றே இந்த ஒலிம்பிக் போட்டி அழைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் ரத்தாகின்றன அல்லது தள்ளிப் போடப்பட்டு வருகின்றன.

Story first published: Thursday, April 2, 2020, 21:30 [IST]
Other articles published on Apr 2, 2020
English summary
IOC Chief Thomas Bach has thanked PM Modi for his support to Tokyo Olympics
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X