தம்பி எதிர்காலம் பிரைட்டா இருக்கு.. ரோட்டோரத்தில் வியக்க வைத்த குட்டிப்பையன்.. தட்டிக்கொடுத்த பும்ரா

மும்பை : சிறுவனின் பவுலிங் வீடியோவை கண்டு பாராட்டி இருக்கிறார் இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் பும்ரா.

Bumrah போலவே Bowling செய்த குட்டிப்பையன்

கிரிக்கெட் உலகில் பும்ராவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதற்கு காரணம் அவரது வித்தியாசமான பந்துவீச்சுதான்.

அதுமட்டுமின்றி தரவரிசையில் நம்பர் 1 இடத்திலும் இருக்கிறார் பும்ரா. அவரை பின்பற்றி பல இளம் வீரர்கள் பந்துவீசி வருகின்றனர்.

அந்த வலி எனக்கு தெரியும்... சீக்கிரமே மீண்டு வர்ற தைரியம் உங்க கிட்ட இருக்கு.. யுவராஜ்

கவனத்தை ஈர்க்கும் பந்துவீச்சாளர்

கவனத்தை ஈர்க்கும் பந்துவீச்சாளர்

வேகப் பந்துவீச்சில் சில வீரர்கள் தாங்கள் பந்து வீசும் முறையால் கவனத்தை ஈர்ப்பார்கள். உதாரணத்திற்கு இலங்கையின் லசித் மலிங்காவை சொல்லலாம். அவரது பந்துவீச்சு முறை முற்றிலும் வித்தியாசமானது. அவரிடம் பல நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பும்ராவும் துவக்கத்தில் இருந்தே தனக்கென தனி பந்துவீச்சு முறையை கொண்டு இருந்தார்.

உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்

உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் முன்பே அவரது பந்துவீச்சு வித்தியாசமானதாக இருந்தது. அதன் பின் மும்பை 2013இல் இந்தியன்ஸ் அணியில் ஆடத் துவங்கியதில் இருந்து மலிங்காவின் அறிவுரைகளை பெற்றார். தற்போது உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக மாறி உள்ளார்.

பாராட்டு

பாராட்டு

அவர் மிக குறைந்த தூரமே ஓடி வந்து அதிக வேகத்தில் பந்துவீசுவதும், அதிக அளவில் யார்க்கர்களை வீசி, அதிலும் துல்லியமாக செயல்படுவதும் கிரிக்கெட் உலகில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது பந்துவீச்சு ஸ்டைலுக்கு பலர் ரசிகர்கள்.

பும்ரா போல..

பும்ரா போல..

சிறுவர்கள் முதல் வயதான பாட்டி வரை அவரைப் போல பந்து வீசி வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை பாகிஸ்தான் நாட்டில் கூட ஒரு சிறுவன் பும்ரா போல பந்து வீசிய வீடியோ வெளியானது. அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சு பிரபலம்.

சாலையில் சிறுவன்

சாலையில் சிறுவன்

தற்போது தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் இருக்கும் நிலையில் ஒரு சிறுவன் முக்கிய சாலை ஒன்றின் ஓரத்தில் பும்ரா போலவே பந்து வீசும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த சிறுவன் பும்ரா போலவே ஓடி வருகிறான். அவரைப் போலவே கையை சுழற்றி அதிக வேகத்தில் பந்து வீசுகிறான்.

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

அந்த வீடியோவை பும்ரா ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவை பும்ராவும் பார்த்து கமென்ட் செய்துள்ளார். பும்ரா, "சிறுவனே.. எதிர்காலம் சிறப்பாக உள்ளது. இதை தொடரவும்" என அந்த சிறுவனை பாராட்டி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல்-இல் பும்ரா

ஐபிஎல்-இல் பும்ரா

பும்ரா அடுத்து 2020 ஐபிஎல் தொடருக்கு தயார் ஆகி வருகிறார். ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19 முதல் துவங்க உள்ளது. பும்ரா விரைவில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். அங்கே மூன்று வார பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
IPL 2020 : Jasprit Bumrah wishes young kid who imitates his bowling action in roadside. Meanwhile, Bumrah is preparing for IPL 2020.
Story first published: Thursday, August 13, 2020, 11:08 [IST]
Other articles published on Aug 13, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X