For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புது வருஷத்தில் புதிய கோச்.. ஐஎஸ்எல் தொடரில் கேரளா மற்றும் புனே அணிகள் அதிரடி!

மும்பை : கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்.சி மற்றும் எஃப்.சி. புனே சிட்டி ஆகிய அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து அந்த அணிகள் புதிய ஊக்கம் பெற்றுள்ளன. ஆனால் முந்தைய சீசன் ஹீரோ இந்திய சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) போட்டிகளில் இந்த அணிகள் தங்கள் இலக்கை தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.

40 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நாளை ஐஎஸ்எல் போட்டிகள் மீண்டும் தொடங்குகிறது. இதில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி புதிய பயிற்சியாளருடன் ஏடிகே அணியை எதிர்த்து கொச்சியில் களம் இறங்குகிறது.

ISL 2019 - New coaches for Kerala and Pune teams

கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் பயிற்சியாளரான டேவிட் ஜேம்சுடன் ஒரு பிரிவினை வந்த பிறகு தற்போது நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் மேனேஜர் நெலோ விங்கடா அந்த அணிக்கு புதிய பயிற்சியாளர் ஆகியுள்ளார். ஆனால் சீசனின் பாதியில் பயிற்சியாளரை மாற்றுவதால் ஏதாவது நடக்குமா ? கேரளா அணியின் பழைய வரலாற்றைப் பார்க்கும்போது பயிற்சியாளரை மாற்றுவதால் ஒரு ஆட்டத்தில்கூட ஒரு நல்ல முடிவு கிடைக்கவில்லை என்பதே பதிலாக இருக்கிறது.

இந்த சீசனில் புனே சிட்டி அணியின் பயிற்சியாளர் மிகுல் ஏஞ்சல் மாற்றப்பட்டு இடைக்கால பயிற்சியாளராக பிரதியூம் ரெட்டி நியமிக்கப்பட்டார். அதற்குப் பிறகு இரண்டாவதாக தற்போது கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு நெலோ விங்கடா நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதியூம் ரெட்டி புனே அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டபிறகு அந்த அணியில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

தற்போது புனே சிட்டி அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்தின் பில் பிரௌன் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தற்போது 11 புள்ளிகளுடன் அந்த அணி ஏழாவது இடத்தில் உள்ளது. ஆனாலும் அந்த அணி இலக்கை எட்டுவது ஒரு தொலைதூர கனவு போல் தோன்றுகிறது.

கடந்த ஐஎஸ்எல் சீசனில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி உட்பட மூன்று அணிகள் பாதி ஆட்டத்தில் தங்களது தலைமைப் பயிற்சியாளரை மாற்றியுள்ளது. முன்னாள் பயிற்சியாளர் ரெனே மெல்லென்ஸ்டீன், தலைமையில் விளையாடிய கேரளா அணி ஏழு ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

மீதமுள்ள ஐ.எஸ்.எல். சீசனில் கேரள பிளாஸ்டர்ஸ் அணியில் இணைந்திருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், திறமையான இந்திய வீரர்களுடன் பணியாற்றுவதில் பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ள நெலோ விங்கடா அடுத்து விளையாவுள்ள போட்டிகளில் அணிக்கு வெற்றியைத் தேடித் தருவேன் என குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் மிகக் கடுமையாக உழைத்தால் தான் பிளே-ஆஃப் சுற்றுக்குள் கேரளா அணியை கொண்டு செல்ல முடியும் என்பதையும் நெலோ விங்கடா அறிந்துள்ளார்.

விங்கடா முதலில் தனது அணியில் உள்ள வீரர்களின் மன உறுதியை உயர்த்த வேண்டும். இதே போல் புனே அணியின் பயிற்சியாளர் பிரௌன் அவரது அணியை வேகமாக முன்னேற்ற வேண்டும். ஆனாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு அந்த அணி செல்லுமா என்பது சந்தேகம்தான்.

(Photos Courtesy - ISL)

Story first published: Thursday, January 24, 2019, 18:04 [IST]
Other articles published on Jan 24, 2019
English summary
ISL 2019 - New coaches appointed for Kerala Blasters and Pune City teams
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X