தக்க நேரத்தில்.. ஜப்பான் தன்னார்வலர் உதவியிருக்காவிட்டால்.. தங்கம் வென்ற ஜமைக்கா வீரர் உருக்கம்

ஜப்பான்: வாழ்க்கை என்பது எப்போதும் நாம் கணிக்க முடியாத ஒன்று. எப்போது, என்ன நடைபெறும் என்று எவராலும் அறுதியிட்டு கூற முடியாது. முழுவதும் சர்பிரைஸ் பேக்கேஜ் தான்.

அப்படிப்பட்ட சர்பிரைஸ் பேக்கேஜிங் ஒரு சாம்பிள் இந்த செய்தி. சமீபத்தில், உங்கள் கண்களில் இப்படியோரு தகவல் எதேச்சையாக பட்டிருக்கலாம். "டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 110மீ தடை தாண்டுதல் ஓட்டத்தில், ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் (Hansle Parchment) தங்கப்பதக்கம் வென்றார்" என்று.

நாமும் இந்த செய்தியை கேஷுவலாக கடந்து சென்றிருக்கலாம். நமக்கு நம் நாட்டைச் சேர்ந்தோர் தங்கம் வென்றால் தான் கோடி ஆச்சர்யமேயொழிய, மற்ற நாட்டவர்கள் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் செய்தி ஒரு சாதாரண செய்திதான். எளிதாக கடந்து சென்றிருப்போம்.

 ஒரே தங்கம்.. ஓஹோ வாழ்க்கை...உலகில் இரண்டாம் இடம் சென்ற நீரஜ் சோப்ரா ஒரே தங்கம்.. ஓஹோ வாழ்க்கை...உலகில் இரண்டாம் இடம் சென்ற நீரஜ் சோப்ரா

 ஜமைக்கா வீரர்

ஜமைக்கா வீரர்

ஆனால், இந்த ஜமைக்கா வீரர் தங்கம் வென்றதற்கு பின்னால் ஒரு திரைப்படமே எடுக்கக் கூடிய அளவுக்கு செமத்தியான கதை இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அந்த அன்றைய தினம் ஆண்களுக்கான 110மீ தடை தாண்டுதல் போட்டி தயாராகிக் கொண்டிருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவே உள்பட 7 வீரர்கள் அதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர். போட்டிக்கு ஒருவர் மட்டும் மிஸ்ஸிங் ஆவது போல் தெரிந்தது, யார் என்று பார்த்தால், அது ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட்.

 வழி மாறிப் பயணம்

வழி மாறிப் பயணம்

ஜமைக்கா வீரர் ஹான்சில் போட்டி நடைபெறும் ஸ்டேடியத்துக்கு செல்வதற்கு பதில், வழி மாறி வேறு எங்கேயோ சென்று முழித்திருக்கிறார். அவருக்கு ஸ்டேடியத்துக்கு செல்லும் வழியும் தெரியவில்லை. யாரிடம் இதை கேட்பது என்றும் புரியவில்லை. அப்போது இவர் அல்லாடிக் கொண்டிருப்பதைக் கண்ட ஒலிம்பிக் தன்னார்வலர் ஒருவர் இவரை அழைத்து விசாரித்த போதுதான், 110மீ தடை தாண்டுதல் போட்டிக்கு செல்ல வேண்டும். வழி தெரியவில்லை என்றிருக்கிறார் ஹான்சில்.

 நேரம் தவறியிருந்தால்

நேரம் தவறியிருந்தால்

உடனே, அந்த தன்னார்வலர் ஒரு டாக்சியைப் பிடித்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து இவரை வண்டி ஏற்றி விட்டிருக்கிறார். போட்டி நடைபெறும் இடத்தை சிறிது நேரத்தில் அடைந்த ஹான்சில், விரைவாக சென்று சரியான நேரத்தில் தனது பெயரை பதிவு செய்திருக்கிறார். கொஞ்ச நேரம் தவறியிருந்தாலும், ஹான்சில் இந்த ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். இவ்வளவு அல்லோலப்பட்டு சென்ற ஹான்சில் தான், ஆண்களுக்கான 110மீ தடை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

 தங்கப்பதக்கம்

தங்கப்பதக்கம்

8 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில், ஜமைக்காவின் ஹான்சில் பார்ச்மென்ட் பந்தய தூரத்தை 13.04 வினாடிகளில் கடந்து உலக சாம்பியன் கிரான்ட் ஹோலோவேவுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தார். ஹோலோவே 13.09 வினாடிகளில் கடந்து 2-வது இடமே பிடிக்க முடிந்தது. மற்றொரு ஜமைக்கா வீரரான ரொனால்டு லெவி 13.10 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். (நிச்சயம் இந்த கதையை ஓர் படமாகவே எடுத்துவிடலாம்).

 தவறான வழியில் பயணம்

தவறான வழியில் பயணம்

இதனை அந்த ஜமைக்கா வீரர் தனது சமூக தளத்தில் வீடியோ வெளியிட்ட பிறகு தான் இந்த உண்மை தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஹான்சில் பார்ச்மென்ட் கூறுகையில், "அரையிறுதிக்கு, தற்செயலாக தவறான இடத்திற்கு தவறான பேருந்தில் சென்றேன். காதுகளில் ஹெட்செட் அணிந்து மியூசிக் கேட்டு வந்தேன். பேருந்தில் இருந்தவர்கள் சொல்வதை எதுவும் கேட்கவில்லை. நான் எதைப் பற்றியும் யோசிக்காமல், மொபைலில் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நான் கண்விழித்து பார்க்கும் போது இந்த பஸ் தவறான வழியில் செல்கிறது என்பதை உணர்ந்தேன். அந்த சுற்றுப்புறங்கள் எனக்கு பரிச்சயமானதாக இல்லை.

 அந்த பெண்ணை கண்டுபிடிப்பேன்

அந்த பெண்ணை கண்டுபிடிப்பேன்

நான் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வந்து மற்றொரு பேருந்தில் தடகள அரங்கத்திற்கு திரும்ப வேண்டும் என்று பேருந்தில் இருந்த அனைவரும் என்னிடம் கூறினார்கள். நான் அதைச் செய்திருந்தால், நான் சரியான நேரத்தில் அங்கு வந்திருக்க மாட்டேன். போட்டி நடைபெறும் இடத்திற்கு என்னை அழைத்துச் செல்ல டோக்கியோ 2020 கார்களில் ஒன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன், ஆனால் இந்த மக்கள் மிகவும் கண்டிப்பானவர்கள். அப்போதுதான் ஒரு தன்னார்வலரை நான் பார்த்தேன். டோக்கியோ ஒலிம்பிக் டாக்சிகளில் ஒன்றை எடுத்துச் செல்ல அந்த பெண் உண்மையில் எனக்கு கொஞ்சம் பணம் கொடுத்தார். அப்படித்தான் என்னால் போதுமான நேரத்தில் அரங்கத்தை அடைய முடிந்தது. நான் அந்த பெண்ணை கண்டுபிடித்து என் தங்கப் பதக்கத்தை அவளுக்குக் காண்பிக்கப் போகிறேன், ஏனென்றால் அவள் எனக்கு உதவி செய்ததால் தான் என்னால் மெடலை வெல்ல முடிந்தது" என்று தான் வெளியிட்ட வீடியோவில் பார்ச்மென்ட் கூறினார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Jamaica hurdler reached wrong venue Olympic gold - ஒலிம்பிக்
Story first published: Thursday, August 12, 2021, 17:29 [IST]
Other articles published on Aug 12, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X