தமிழக கபடி வீரர் தர்மராஜ் சேரலாதனுக்கு சென்னை ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

By Veera Kumar

சென்னை: கபடி உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த தர்மராஜ் சேரலாதன். வெற்றியில் முக்கிய பங்கு இருந்தது.

தஞ்சை மாவட்டம், திருச்சனம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 41 வயதாகும் சேரலாதன் சிறு வயதிலிருந்தே கபடி விளையாடி வருகிறார். தற்போது தென் மத்திய ரயில்வேயில் பணியாற்றி வரும் சேரலாதன் மிகப் பெரிய கபடி கிளப்பை தனது சொந்த ஊரில் ஏற்படுத்த வேண்டும். எண்ணற்ற இளைஞர்களை கபடியில் சிறப்பாக பரிமளிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆசையுடன் உள்ளார்.

இன்று சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் மேள, தாளம் முழங்க உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அங்கிருந்து அவர் தஞ்சை செல்கிறார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தர்மராஜ் சேரலாதன், தமிழகத்தில் இருந்து அதிக கபடி வீரர்களை உருவாக்குவதே எனது லட்சியம் என்றார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Kabbadi player Darmaraj Cheralathan recieved huge reception at Chennai airport when he returns to his home town.
Story first published: Tuesday, November 1, 2016, 10:45 [IST]
Other articles published on Nov 1, 2016
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X