For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

64 மீ தூரம்.. 2வது இடம்.. அரண்டு போன போட்டியாளர்கள்.. வட்டு எறிதலில் கமல்ப்ரீத் மிரட்டல்

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ரசிகர்களுக்கு இதைவிட ஒரு பெருமை கொள்ளும் தருணம் இருக்க முடியாது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், இந்தியா கூடுதலாக வீரர், வீராங்கனைகளை களமிறக்கினாலும், எதிர்பார்த்த அளவுக்கு மெடல்கள் கிடைக்கவில்லை.

பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு முதல் பதக்கம் (வெள்ளி) பெற்றுக் கொடுக்க, நேற்று ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் உறுதியானது. குத்துச்சண்டையில் லோவ்லினா அரையிறுதிக்கு முன்னேறி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அதேபோல், பேட்மிண்டனில் பி.வி.சிந்து, அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில், இன்று (ஜுலை.31) நிறைய போட்டிகள் நடைபெற உள்ளன.

சாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த "மாஜி" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே?.. அதிமுக குழப்பம்

 இரண்டு பிரிவுகள்

இரண்டு பிரிவுகள்

அதில் மிக முக்கியமான போட்டியாக அமைந்திருக்கிறது Discus Throw. ஆம்! பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டிகள் இன்று நடைபெற்றன. குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' என்று இரண்டு பிரிவுகளாக வீராங்கனைகள் பிரிக்கப்பட்டு களமிறக்கப்பட்டனர். ஒவ்வொரு குரூப்பில் தலா 15 வீராங்கனைகள் என மொத்தம் 30 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில், குரூப் 'ஏ'வில் இந்தியா சார்பாக சீமா புனியாவும், குரூப் 'பி' யில், இந்தியா சார்பில் கமல்ப்ரீத் கவுர் ஆகியோரும் இடம்பெற்றனர்.

 60.57 மீட்டர்

60.57 மீட்டர்

முதலில் குரூப் 'ஏ' பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் ஒவ்வொரு வீராங்கனையும் தலா 3 முறை வட்டு ஏறிய வேண்டும். அதன்படி, இந்த பிரிவில் இந்திய வீராங்கனை சீமா புனியா 3 சுற்றிலும் சேர்த்து சராசரியாக 60.57 மீட்டர் தூரம் வீசி ஆறாவது இடம் பிடித்திருந்தார். இந்த பிரிவில் முதல் வீராங்கனையாக 63.75 மீட்டர் தூரம் வீசி குரோஷியாவின் பெர்கோவிக் முதலிடம் பிடித்தார்.

 64 மீட்டர் தூரம்

64 மீட்டர் தூரம்

பிறகு 'பி' பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், கமல்ப்ரீத் கவுர் உண்மையில் அசத்திவிட்டார் என்றே கூற வேண்டும். அதாவது, சராசரியாக 64 மீட்டர் தூரம் வீசி, 'பி' பிரிவின் பட்டியலில் இரண்டாவது வீராங்கனையாக இடம் பிடித்தார். இவரது 64 மீட்டர் தூரம் என்பது, 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷிய வீராங்கனை எடுத்த புள்ளிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 'பி' பிரிவில் அமெரிக்காவின் அல்மன் 66.42 தூரம் வீசி முதலிடம் பிடித்தார்.

 மெடல் கிடைக்குமா?

மெடல் கிடைக்குமா?

எனினும், சீமா புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினார். அவரது டோக்கியோ ஒலிம்பிக் கனவு இத்தோடு முடிவுக்கு வந்தது. அதேசமயம், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கமல்ப்ரீத் கவுர், நிச்சயம் மெடல் வெல்வார் என்று உறுதியாக நம்பலாம். ஏனெனில், இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து, அதிக தூரம் வீசிய வீராங்கனைகளில் கவுர் 2ம் இடம் பெறுகிறார். இதே வேகத்தில் வீசினால், நிச்சயம் வெள்ளிப்பதக்கம் உறுதி. இன்னும் கொஞ்சம் கூடுதல் முயற்சி மேற்கொண்டால், தங்கம் கிடைக்கக் கூட வாய்ப்புள்ளது. பெண்கள் வட்டு எறிதலுக்கான இறுதிப் போட்டி வரும் ஆகஸ்ட் 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் இந்தியாவுக்கு நிச்சயம் கமல்ப்ரீத் கவுர் மெடல் வென்றுத் தருவார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Saturday, July 31, 2021, 13:45 [IST]
Other articles published on Jul 31, 2021
English summary
Kamalpreet Kaur qualifies discus throw final - கமல்ப்ரீத்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X