For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேசிய நெட்பால் சப்-ஜூனியர் சாம்பியன்ஷிப்.. கர்நாடக அணி அரையிறுதிக்கு தகுதி!

பெங்களூரு: 26-வது சப் ஜூனியர் தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் தொடரில் கர்நாடக ஆண்கள் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரை இறுதி போட்டியில் இந்த அணி டெல்லியுடன் மோத இருக்கிறது.

நெட்பால் சாம்பியன்ஷிப் தொடரில் கர்நாடகா ஆண்கள் அணி முதல் முறையாக நாக் அவுட் போட்டியில் தமிழகத்துடன் விளையாடி 32-10 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிராவுக்கு எதிரான இரண்டாவது சுற்று போட்டியில் 20 -16 என்ற கணக்கில் கர்நாடக ஆண்கள் அணி வெற்றி வாகை சூடியது.

Karnataka mens team qualified for the semi-finals of the National Netball Sub Junior Championship

இதன்பின்னர் காலிறுதி போட்டியில் கேரளாவை எதிர்கொண்டது கர்நாடாகா. இந்த போட்டியில் கேரளாவை அடித்து துவம்சம் செய்த கர்நாடக ஆண்கள் அணி 27-12 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது.
தேசிய நெட்பால் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில் கர்நாடகாவும், டெல்லியும் மோதுகின்றன. டெல்லியின் மம்தா மோட்ரென் சீனியர் செகண்டரி பள்ளியில் வருகிற 24-ம் தேதி இந்த போட்டி நடைபெறுகிறது.

 IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி - IPL 2021: தினம் 3 - 4 மணி நேர பேட்டிங் பயிற்சி -

கர்நாடகா பெண்கள் நெட்பால் அணியை பொறுத்தவரை தமிழகத்துடன் முதல் நாக் அவுட் போட்டியில் விளையாடி 16-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது சுற்றில் சத்தீஸ்கருடன் விளையாடி 20-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் காலிறுதி போட்டியில் கேரளாவுக்கு எதிராக 12-21 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்த கர்நாடகா பெண்கள் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

அரையிறுதி போட்டியில் நுழைந்துள்ள கர்நாடகா ஆண்கள் அணிக்கு கர்நாடகா நெட்பால் அசோசியேஷன் பொதுச்செயலாளர் கிரிஷ் சி பிபிஎம் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

Story first published: Monday, September 20, 2021, 19:49 [IST]
Other articles published on Sep 20, 2021
English summary
The Karnataka men's team qualified for the semi-finals of the National Netball Sub Junior Championship Series. The team is set to clash with Delhi in the semi-finals
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X