மின்னல் வேகம்! உசைன் போல்ட்டின் உலக சாதனையை உடைத்து எறிந்த கிராமத்து மனிதர்.. வைரல் ஆன இந்தியர்!

உசைன் போல்ட் சாதனையை உடைத்த கிராமத்து மனிதர் | Karnataka Villlager beat Usain Bolt’s world record

பெங்களூரு : கர்நாடக கிராமத்தை சேர்ந்த ஸ்ரீனிவாச கௌடா என்பவர் உசைன் போல்ட் வேகத்தை முறியடித்து மிரட்டல் சாதனை செய்துள்ளார்.

கம்பாலா எனப்படும் எருமை மாடு பந்தயத்தில், மாடுகளை ஓட்டிச் செல்லும் வீரரான அவர், 142.50 மீட்டர் தூரத்தை 13.62 வினாடிகளில் கடந்து இருக்கிறார்.

இது உசைன் போல்ட்டின் 100 மீட்டர் உலக சாதனையை விட அதிக வேகம் ஆகும்.

கப் உடைந்தும் அலட்சியம் காட்டிய சாதனை நாயகன்

கம்பாலா பந்தயம்

கர்நாடகா மாநிலத்தில் உடுப்பி மற்றும் மங்களூர் விவாசய பூமிகளில் பாரம்பரியமான எருமை பந்தயம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. கம்பாலா எனப்படும் இந்த பந்தயம், தமிழகத்தின் ஜல்லிக்கட்டு போன்றே இளைஞர்களின் வீரத்தை பறை சாற்றும் விளையாட்டாக உள்ளது.

போராட்டம்

போராட்டம்

இந்த பந்தயமும் சில ஆண்டுகளுக்கு முன் விலங்கின ஆர்வலர்களின் எதிர்ப்பால் தடை செய்யப்பட்டு, பின் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த அதே சமயத்தில் பலரின் கோரிக்கை எழுந்ததை அடுத்து, அப்போதைய காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவால் தடை நீக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீனிவாச கெளடா சாதனை

சமீபத்தில் நடந்த இந்த பந்தயத்தில் ஸ்ரீனிவாச கௌடா என்ற 28 வயது இளைஞர் மிக அதிக வேகத்தில் ஓடிய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார். அவர் போட்டி தூரமான 142.50 மீட்டரை 13.62 வினாடிகளில் கடந்து சாதனை புரிந்தார்.

உசைன் போல்ட் சாதனை

உசைன் போல்ட் சாதனை

மேலும், உசைன் போல்ட் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 9.58 வினாடிகளில் ஓடிய சாதனையையும் முறியடித்துள்ளார் இவர். ஆம், 142.5 மீட்டரில் அவர் ஓடியதை 100 மீட்டார் தூரத்துக்கு கணக்கிட்டு பார்த்த போது அவர் அந்த தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்துள்ளார்.

கடினம்

உசைன் போல்ட் சாதனை ஓட்டப் பந்தய களத்தில் செய்தது. ஸ்ரீனிவாச கௌடாவின் சாதனை நெல் விவாசயம் செய்யும் சேறான தரையில் செய்தது. சிலர் போல்ட் சாதனையை விட இது கடினமான இடத்தில் செய்தது என கூறி வருகிறார்கள்.

மாட்டின் பலம் மற்றும் வேகம்

மாட்டின் பலம் மற்றும் வேகம்

சிலர் இரண்டையும் ஒப்பீடு செய்ய முடியாது என கூறி வருகின்றனர். காரணம் எருமை மாட்டின் பலம் மற்றும் வேகம், அவரை இழுத்துச் சென்று இருக்கும் என கூறுகின்றனர். எது எப்படியோ, அவரது சாதனை நிச்சயம் அசாத்தியமானது தான்.

ஒரே நாளில் வைரல்

இந்த சாதனையை அடுத்து ஒரே நாளில் வைரல் ஆனார் ஸ்ரீனிவாச கௌடா. பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். சிலர் இவரை அரசு கௌரவிக்க வேண்டும் என கூறி உள்ளனர். இவரை உடனடியாக ஓட்டப்பந்தய வீரராக மாற்ற வேண்டும் எனவும் கூறி உள்ளனர்.

இரும்பு போன்ற வலிமை

ஸ்ரீனிவாச கௌடா பார்க்கவே மிக வலிமையான உடலை கொண்டுள்ளார். அவரது உடலில் இயல்பாக பெறப்பட்ட "எய்ட் பேக்" அமைந்துள்ளது. அதையும் பலர் குறிப்பிட்டு, "எந்த ஜிம்முக்கும் போகாமல் அவர் இந்த உடலை பெற்றுள்ளார்" என கூறி உள்ளனர்.

ஒலிம்பிக்கில் ஆட வேண்டும்

மேலும், சிலர் 2020 டோக்யோ ஒலிம்பிக்கில் ஸ்ரீனிவாச கௌடாவை இந்திய அரசு அனுப்ப வேண்டும். அதற்கு அவரை தயார் செய்ய வேண்டும் எனவும் கூறி உள்ளனர். இந்தியாவின் கிராமங்களில் வெளிச்சத்துக்கு வராத பல ஸ்ரீனிவாச கௌடாக்கள் உள்ளனர் என்பது மட்டும் உண்மை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Karnataka Villlager beat Usain Bolt’s world record during Kambala race. His name is Srinivasa Gowda, who is a Kambala jockey and he achieved this record in the Kambala race.
Story first published: Friday, February 14, 2020, 16:26 [IST]
Other articles published on Feb 14, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X