For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுடிதாரில் வந்த சூறாவளி.. மல்யுத்த களத்தைக் கலக்கிய கவிதாதேவி!

டபிள்யூ டபிள்யூ ஈ போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீரர் கவிதா தேவி சுடிதாரில் வந்து ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

By Gajalakshmi

சென்னை : உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் டபிள்யூ டபிள்யூ மல்யுத்த போட்டியில் ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி சுடிதாரில் வந்து சண்டையிட்டது ரசிகர்களையும், பார்வையாளர்களையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

உலக மல்யுத்தப் பொழுதுபோக்குகான டபிள்யூ.டபிள்யூ.ஈ இந்தியப் பங்கேற்பாளர்களுக்குப் புதிதான விஷயமல்ல. கிரேட் காளி முதல் WWE சாம்பியன் ஜிந்தர் மஹல் வரை எண்ணற்ற வீரர்களால் பெருமையடைந்துள்ளது. அந்த வரிசையில் காளியிடம் பயிற்சி பெற்று இந்தியாவின் முதல் பெண் மல்யுத்த வீரராக ஹரியானாவின் கவிதா தேவி தற்போது போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

கடந்த 5 நாட்களுக்கு முன்னர் அவர் பங்கேற்ற போட்டி வைரலாக பகிரப்பட்டு வருகிறது. நியூசிலாந்து மல்யுத்த வீரர் டகோட்டா காய் உடன் போட்டிபோட்ட கவிதா, முதல் சுற்றில் தோல்வியையே அடைந்தார். எனினும், இந்தப் போட்டி வைரலாக பரவி வருவதற்கு மற்றொரு காரணம் கவிதாவின் மல்யுத்தத் திறன்களும், சுடிதாரில் வந்து அசத்தியதுமே தான்.

 சுடிதாரில் வந்த சூறாவளி

சுடிதாரில் வந்த சூறாவளி

சல்வார் கமீஸ் அணிந்து வந்த கவிதா ரிங்கிற்குள் எதிர் போட்டியாளரை தூக்கி துவம்சம் செய்தது ரசிகர்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கவிதா மே (MAE) இளைஞர்களுக்கான கிளாசிக் டோர்ணமென்ட்டில் பங்கேற்றதன் மூலம் டபிள்யூடபிள்யூ ஈ விளையாட்டில் முதல் பெண் போட்டியாளராக பங்கேற்றார்.

 சிறந்த வீரர்

சிறந்த வீரர்

டபிள்யூ டபிள்யூ ஈ துபாய் போட்டியிலும் கவிதா தேவி பங்கேற்றுள்ளார். இந்த தகுதிச் சுற்றுகளில் கவிதா சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தியுள்ளார். போட்டியில் பங்கேற்ற 32 போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.

 கிரேட் காளியில் பயின்றவர்

கிரேட் காளியில் பயின்றவர்

ஹரியானாவைச் சேர்ந்த கவிதா, மல்யுத்ததை பஞ்சாபை சேர்ந்த மல்யுத்தத்தை ஊக்குவிக்கும் பயிற்சி அகாடமியான தி கிரேட் காளி(தலிப் சிங் ரானா)யில் பயிற்சி எடுத்துள்ளார். பி புல் புல் என்கிற பெண் மல்யுத்த வீரருடன் மல்யுத்தம் செய்யும் வீடியோ, சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டதையடுத்து இவர் மக்களின் பார்வைக்கு வந்தார்.

பாராட்டுகள்

டபிள்யூ டபிள்யூ போட்டியில் கவிதா தேவி இணைத்தக் கொள்ளப்பட்டது குறித்து அந்த அமைப்பின் திறன் மேம்பாட்டு துணைத் தலைவர் கேன்யன் செமன் கூறும் போது "

2017ம் ஆண்டு துபாயில் நடந்த wwe போட்டியில் கவிதா தேவி உறுதியான ஆட்டக்காரராக திகர்ந்தார். அவர் ஒரு தடகள வீரர், உறுதியான பெண்மணியும் கூட. விளையாட்டில் உள்ள பொழுகுதுபோக்கு என்ற அம்சத்தை கப்பென பிடித்துக் கொண்டு செயல்படுகிறார், முன்னேற வேண்டும் என்ற அவருடைய ஆர்வம், டபிள்யூ டபிள்யூவில் வரப்போகும் MAE இளைஞர்களுக்கான கிளாசிக் டோர்னமெண்ட்டுகளில் சிறப்பாக செயல்பட உதவும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, September 6, 2017, 6:20 [IST]
Other articles published on Sep 6, 2017
English summary
Hailing from Haryana Kavita Devi became the first Indian woman to compete in the World Wrestling Entertainment made surprise to audiences with coming in salwar kameez and performed wrestling skills adorably.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X