For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேவிக் கேவி அழுத கெவின் பீ்ட்டர்சன்

லண்டன்: இங்கிலாந்து அணியிலிருந்து தன்னை நீக்கிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தான் அழுததாக முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

தற்போது இங்கிலாந்து அணியில் கெவின் பீட்டர்சன் இல்லை. அவரை நீக்கி விட்டனர். அவரது நீக்கம் அப்போது இங்கிலாந்து அணியில் சலசலப்புகளை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் போட்டிகளை ஆட இங்கிலாந்து போயிருந்தது. அபபோது ஐந்து போட்டிகளிலும் அது தோல்வியைத் தழுவியது. இதனால் பெரும் சர்ச்சைக்குள்ளானது இங்கிலாந்து அணி.

Kevin Pietersen Admits to Crying After Being Sacked From England Team

இதையடுத்து கெவின் பீ்ட்டர்சனை அதிரடியாக நீக்கியது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு. இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள கெவின் பீட்டர்சன், அணியினரை கிரிக்கெட் போர்டு மதிப்பதில்லை. என்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டனர். இருப்பினும் தற்போதைய கேப்டன் இயான் மார்கன் மட்டும் என்னை அணியில் சேர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக அணி நிர்வாகத்திடம் கூறினார்.

நான் நீக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் அழுது விட்டேன். இதை நான் மறுக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கெவின் பீ்ட்டர்சன்.

கெவின் பீட்டர்சன் அதன் பின்னர் டெல்லி டேர்டெவில்ஸ் ஐபிஎல் அணியில் இடம் பெற்று ஆடினார். ஆனால் தற்போது அந்த அணியிலிருந்தும் அவரை நீக்கி விட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Wednesday, January 14, 2015, 16:13 [IST]
Other articles published on Jan 14, 2015
English summary
Former England captain Kevin Pietersen admitted he had cried after being sacked by the ECB in the aftermath of the 5-0 Ashes whitewash in Australia last year. Pietersen had accused his English colleagues of running a bullying culture in the team and said they were jealous of him. Pietersen however said newly appointed England ODI skipper Eoin Morgan was keen to have him back in the team.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X