கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு.. மித்தாலி, நீரஜ் உள்ளிட்ட 12 பேரின் பெயர்கள் இடம்பிடிப்பு!

அமீரகம்: ஷிகர் தவான், நீரஜ் சோப்ரா, மிதாலி ராஜ் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு விருதுகள் அறிவித்து கவுரவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் வீரர் - வீராங்கனைகளை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசால் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் 2021ம் ஆண்டுக்கான கே.எல்.ரத்னா, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் உள்ளிட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 தொடர்ச்சியாக 5வது அரைசதம்.. 20,000 ரன்கள் - பெண்கள் கிரிக்கெட்டின் உச்சம் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக 5வது அரைசதம்.. 20,000 ரன்கள் - பெண்கள் கிரிக்கெட்டின் உச்சம் மிதாலி ராஜ்

கே.எல்.ரத்னா

கே.எல்.ரத்னா

நேற்று மத்திய அமைச்சகம் சார்பில் அனைத்து விருதுகளுக்குமான பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான கேல் ரத்னா விருதுக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதில் ஒலிம்பிக்கில் தக்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவின் பெயர் இடம்பெற்றுள்ளது. மேலும், லாவ்லினா பார்கோகெயின், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேஸ்திரி, ஹாக்கி வீரர் மன்ப்ரீத் சிங் உள்ளிட்டோர் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இவர்களுக்கு விருதுடன் ரூ.25 லட்சம் ரொக்கப்பரிசும் கிடைக்கும்.

அர்ஜுனா

அர்ஜுனா

அர்ஜுனா விருதுக்கு 35 வீரர், வீராங்கனைகள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், தமிழகத்தை சேர்ந்த ஃபென்சிங் வீராங்கனை பவானி தேவி, ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை தீபக் புனியா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

தயான் சந்த் விருது

தயான் சந்த் விருது

விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனையாளராக பாராட்டப்பட்டு தயான் சந்த் விருது வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு லேகா கே.சி ( குத்துச்சண்டை), அபிஜீத்குண்டே (செஸ்), டேவிந்தர் சிங்( ஹாக்கி), விகாஸ் குமார் ( கபடி), சாஜன் சிங் ( மல்யுத்தம்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது வழங்கும் தேதி

விருது வழங்கும் தேதி

மத்திய விளையாட்டு துறை அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும், வரும் அக்டோபர் 13ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Khel Ratna awards for 2021 announced, Mithali raj, Neeraj among 12 to receive on november 13
Story first published: Wednesday, November 3, 2021, 11:05 [IST]
Other articles published on Nov 3, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X