For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்லிமென்டிலேயே விளையாட்டு பற்றி ஒன்றும் தெரியவில்லை.. அதிர வைத்த அமைச்சர் கிரண் ரிஜிஜூ

டெல்லி : விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் கூட விளையாட்டு குறித்த அறிவு இல்லை என வெளிப்படையாக பேசி உள்ளார்.

தந்தையை சைக்கிளில் அமர்த்தி 1200 கிலோமீட்டர் தூரம் அழைத்துச் சென்ற பீகார் பெண் ஜோதி குமாரி, கம்பாலா எனும் எருமைப் பந்தயத்தில் வேகமாக ஓடிய சீனிவாச கௌடா போன்றோரை ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளவர்கள் என நாடாளுமன்றத்தில் சிலர் கூறியதாக தெரிவித்தார் கிரண் ரிஜிஜூ.

இன்னும் ஒரு நாள் தான் இருக்கு வெ.இண்டீஸ்.. உஷாரான இங்கிலாந்து.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!இன்னும் ஒரு நாள் தான் இருக்கு வெ.இண்டீஸ்.. உஷாரான இங்கிலாந்து.. பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!

ஒலிம்பிக்கில் தங்கம்

ஒலிம்பிக்கில் தங்கம்

இந்தியாவில் அபினவ் பிந்த்ரா மட்டுமே ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தனிநபர் ஆவார். ஹாக்கியில் ஒருமுறை இந்தியா குழுவாக தங்கம் வென்றுள்ளது. மற்றபடி, ஒலிம்பிக் உள்ளிட்ட எந்த உலக விளையாட்டுத் தொடரிலும் இந்தியா பதங்கக்கங்களை குவித்ததில்லை. ஒட்டு மொத்தமாக இந்தியா விளையாட்டுத்துறையில் இந்தியா பின்தங்கி உள்ளது.

அறிவு மிகக் குறைவு

அறிவு மிகக் குறைவு

அது பற்றி சமீபத்தில் அபினவ் பிந்த்ராவின் விளையாட்டு வீரர்களுக்கான உயர் செயல்திறன் தலைமைத்துவ திட்டத்தை துவக்கி வைத்த விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசினார். "விளையாட்டு பற்றி இந்திய சமுதாயத்தில் அறிவு மிகக் குறைவு." என்றார்.

பாராளுமன்றத்தில் கூட..

பாராளுமன்றத்தில் கூட..

மேலும், "எனது சொந்த சகாக்களை இழிவுபடுத்த விரும்பவில்லை. ஆனால், பாராளுமன்றத்தில் கூட (விளையாட்டு பற்றி) அறிவு இல்லை" என்று கிரண் ரிஜிஜூ வெளிப்படையாக பேசி அதிர வைத்தார். அது பற்றி மேலும் விவரித்தார் அவர்.

தங்கப் பதக்கம் மட்டும் விரும்புகிறார்கள்

தங்கப் பதக்கம் மட்டும் விரும்புகிறார்கள்

"கிரிக்கெட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரியும், ஆங்கிலேயர்கள் அதை நம் மனதில் திணித்துள்ளனர். அவர்கள் ஆடுகிறார்கள், நாம் அவர்களை வெல்ல வேண்டும். ஆனால் அது தவிர, எந்த அறிவும் இல்லை. அதே சமயம், அனைவரும் தங்கப் பதக்கத்தை மட்டும் விரும்புகிறார்கள்." என்றார் கிரண் ரிஜிஜூ.

ஜோதி குமாரி

ஜோதி குமாரி

பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி என்ற பெண் குர்கானில் இருந்து 1200 கிலோமீட்டர் தூரம் தன் தந்தையை சைக்கிளில் அமர வைத்து அழைத்துச் சென்றார், லாக்டவுன் காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் அவர் இந்த முடிவை எடுத்தார். அவரை சைக்கிளிங்கில் பெரிய நட்சத்திரமாக வருவார் என பலரும் கூறினர்.

சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம்

சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம்

இது குறித்து பேசுகையில், "இந்த கோவிட் -19 தொற்றுநோய் காலத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையில் குர்கானில் இருந்து பீகார் வரை சைக்கிளில் தனது தந்தையை அழைத்துச் சென்றார் இந்த இளம்பெண். இது ஒரு சோகமான விஷயம். ஆனால் எனது (நாடாளுமன்ற) சகாக்கள் சிலர் அவர் இந்தியாவிற்கு சைக்கிளிங்கில் தங்கப் பதக்கம் பெற்றுத் தருவார் என்று கூறுகிறார்கள்." என்றார் கிரண் ரிஜிஜூ.

அறிவுப் பற்றாக்குறை

அறிவுப் பற்றாக்குறை

"அறிவுப் பற்றாக்குறை மக்களை எப்படி சிந்திக்க வைக்கிறது என்பதைப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுதலில் எத்தனை முறை உள்ளது, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல நீங்கள் எந்த தரத்தை அடைய வேண்டும் என்பதை அறியாமல், வெறும் தகவல்களை மட்டுமே வைத்து இதை செய்ய முடியாது." என்றார்.

சீனிவாச கௌடா

சீனிவாச கௌடா

கர்நாடகாவை சேர்ந்த சீனிவாச கௌடா என்பவர் எருமை ஓட்டும் பந்தயத்தில் எருமையுடன் சேர்ந்து 100 மீட்டர் தூரத்தை 11 வினாடிகளில் கடந்தார். அவர் உசைன் போல்ட்டை விட வேகமாக ஓடியதாக சமூக வலைதளங்களில் பரபரப்பு எழுந்தது.

அவரை அழைத்தார்கள்

அவரை அழைத்தார்கள்

அது பற்றி பேசுகையில், "கர்நாடகாவில் ஒரு காளை வண்டி ஓடும் போட்டி நடந்தது. அங்கு சீனிவாஸ் என்று ஒருவர் இருந்தார். இது பற்றி தெளிவு கிடைக்க வேண்டும் என்றும், எங்களுக்குத் நிலைமை தெரியாது என்று மக்கள் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, இந்திய விளையாட்டு அதிகார மையத்தினர் அவரை அழைத்தார்கள்" என்று கூறினார் கிரண் ரிஜிஜூ.

புரிதல் இல்லை

புரிதல் இல்லை

"அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த ஓட்டப் பந்தய வீரர் அளவுக்கு இல்லை. என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது முக்கியமல்ல. ஒலிம்பிக் சாம்பியனான உசைன் போல்ட்டை விட வேகமான ஒரு மனிதர் கிடைத்துள்ளார் என்று மக்கள் சொல்லத் தொடங்கினர். நாங்கள் திறமையை அடையாளம் காண வேண்டும், ஆனால் அதே சமயம் புரிதல் இல்லை என்பதையும் பார்க்க வேண்டும், மக்களுக்கு இது தெரியாது." என்றார்.

Story first published: Saturday, July 11, 2020, 21:09 [IST]
Other articles published on Jul 11, 2020
English summary
Kiran Rijiju says even in Parliament there is no knowledge of sports. It came as a revealation.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X