For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒலிம்பிக்கில் வெல்லாத வட கொரியா வீரர்களுக்கு கூலி வேலை.. ரேஷன் கார்டுகளும் பறிமுதல்! அதிபர் ஆவேசம்?

By Veera Kumar

பியோங்யாங்: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வட கொரியா வீரர்களின் ரேஷன் கார்டுகளை பிடுங்கி வைத்துக்கொள்ளவும், அவர்களை சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பவும் அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 2 தங்க பதக்கங்கள் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வட கொரியா வென்றுள்ளது. அதேநேரம், வட கொரியாவின் பரம எதிரி நாடான தென் கொரியாவோ, 9 தங்கம் உட்ட 21 பதக்கங்களை வேட்டையாடியுள்ளது.

5 தங்க பதக்கங்களையாவது வெல்ல வேண்டும் என அதிபர் 'உத்தரவிட்டு' அனுப்பியிருந்த நிலையில், அதைவிட குறைந்த தங்கம் பெற்றதோடு, தென் கொரியாவோடு ஒப்பிட்டால் மிகவும் பின் தங்கியிருப்பதை அதிபர் கிம் ஜோங் விரும்பவில்லை. இது கோபத்தை கிளறியுள்ளதாம்.

கூலி வேலை

கூலி வேலை

இதனால், வட கொரிய வீரர்கள் நாடு திரும்பியதும், பதக்கம் வெல்லாதவர்களை பிடித்து சுரங்க தொழிலுக்கு கூலி வேலை செய்ய அனுப்பிவிட அதிபர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் ரேஷன் கார்டுகளை பறிமுதல் செய்யவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரேஷன் பொருள்

ரேஷன் பொருள்

அந்த நாட்டில் ரேஷன் கடைகளில்தான உணவு பொருட்கள் சப்ளை உண்டு என்பதால் ரேஷன் கார்டுகளை பிடுங்கினால் பெரும் பாதிப்புக்கு அவர்கள் உள்ளாவார்கள்.

செல்ஃபி

செல்ஃபி

வட கொரிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஹோங் உன்-ஜோங் நிலைமை இன்னமும் பரிதாபம். அவர் பதக்கம் வென்றும் சொந்த நாட்டுக்கு திரும்ப பயந்து கொண்டிருக்கிறாராம். ஏனெனில், ரியோவில், தென் கொரிய வீராங்கனையுடன் அவர் செல்ஃபி எடுத்தார். எதிரி நாட்டு வீராங்கனைகளை இணைத்த ஒலிம்பிக் என்ற பெயரில் அந்த போட்டோ வைரலானது.

கடும் கோபம்

கடும் கோபம்

அதுவும், கொடுமைக்கார அதிபர் கிம் ஜோங் உன் கண்ணில் பட்டுள்ளதாம். தென் கொரியர்களுடன் எந்த வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்பது வட கொரியாவில் கடுமையாக அமலிலுள்ள நடைமுறை. ஆனால் வீராங்கனை செல்ஃபி எடுத்துள்ளதால் உறுமியபடி உள்ளாராம் கிம் ஜோங் உன்.

மரண தண்டனை

மரண தண்டனை

இதற்காக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கும் அவர் செல்லக்கூடும் என்பதுதான் வீராங்கனை அச்சத்திற்கு காரணமாம். நல்ல வேளை, இந்தியாவில் பிறந்ததற்காக நமது வீரர்கள், வீராங்கனைகள் மகிழ்ச்சியடைய வேண்டும் போல.

Story first published: Friday, August 26, 2016, 9:43 [IST]
Other articles published on Aug 26, 2016
English summary
The North Korean players who have not won any medal in the Rio Olympics are going to be in a big trouble as the dictator Kim Jong has taken the decision to make them work in coal mines after they return to the country.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X