For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அந்த குத்துச்சண்டை பொண்ணுக்கு விசா கொடுங்க.. இல்லைனா இந்தியாவுக்கே பிரச்சனை ஆயிடும்!

Recommended Video

கொசோவோ நாட்டின் வீராங்கனை டோன்ஜெட்டா சாடிகுக்கு இந்தியா விசா நிராகரிப்பு

டெல்லி : மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் இந்திய தலைநகர் நியூடெல்லியில் நடைபெற உள்ளது.

அந்த தொடரில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து வீராங்கனைகள் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் மேரி கோம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில், கொசோவோ என்ற நாட்டின் வீராங்கனை டோன்ஜெட்டா சாடிகு (Donjeta Sadiku)-க்கு இந்தியா விசா மறுத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது பெரிதாகி உள்ளது.

[உங்களுக்கு சச்சினை பிடிக்கும்னா, நவம்பர் 15-ம் பிடிக்கும்.. 2 மறக்க முடியாத சம்பவங்கள் நடந்த நாள்!]

விசா மறுத்த இந்தியா

விசா மறுத்த இந்தியா

மகளிர் குத்துச்சண்டையில் 60 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க உள்ளார் சாடிகு. அவருடன் இரு பயிற்சியாளர்கள் இந்தியா வர விசாவுக்கு விண்ணப்பித்தனர். எனினும், இந்தியா கொசோவோ நாட்டின் அங்கீகாரத்தில் உள்ள குழப்பம் காரணமாக இவர்கள் மூவருக்கும் விசா கொடுக்காமல் இருக்கிறது.

அங்கீகாரம் வழங்காத இந்தியா

அங்கீகாரம் வழங்காத இந்தியா

கொசோவோ என்ற நாடு தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நாடு. அந்த நாட்டின் உரிமை யாருக்கு என்பதில் பிரச்சனை உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 193 நாடுகளில் 113 நாடுகள் மட்டுமே கொசோவோ நாட்டை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. மற்ற நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. அங்கீகாரம் வழங்காத நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

பல சிக்கல்கள் உள்ளது

பல சிக்கல்கள் உள்ளது

சாடிகு கொசோவோ நாட்டை சேர்ந்தவர் என்றாலும் அங்குள்ள குழப்பம் காரணமாக அருகாமையில் உள்ள அல்பேனியா நாட்டின் பாஸ்போர்ட் பெற்று வைத்திருக்கிறார். இப்படி பல்வேறு சிக்கல்கள் உள்ளதால் இந்தியா விசா மறுத்துள்ளது.

இந்திய ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை

இந்திய ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை

ஆனால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் கொசோவோ நாட்டை அங்கீகரித்துள்ளது. அதனால், இந்தியா அந்த நாட்டு வீரரை தங்கள் நாட்டில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்காவிட்டால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பத்ரா எச்சரித்துள்ளார்.

ஸ்பெயினுக்கு வந்த சோதனை

ஸ்பெயினுக்கு வந்த சோதனை

சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் நடந்த ஒரு சர்வதேச விளையாட்டுத் தொடரில் இதே விசா பிரச்சனை காரணமாக கொசோவோ நாட்டு வீரர்களை அனுமதிக்கவில்லை. இதனால், சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இனி ஸ்பெயினில் எந்த சர்வதேச விளையாட்டுத் தொடரும் நடத்த வேண்டாம் என தன் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. ரியோ ஒலிம்பிக் தொடரில் பிரேசில் நாடு கொசோவோவை அங்கீகரிக்கவில்லை என்றாலும். அந்த நாட்டு வீரர்களை விளையாட அனுமதித்தது. அதே போல, இந்தியாவும் செய்வது மட்டுமே ஒரே தீர்வு.

இந்தியாவுக்கே பிரச்சனை

ஸ்பெயின் போன்ற சிக்கல் இந்தியாவுக்கும் எழுந்தால் அடுத்து இந்தியாவில் நடக்கவுள்ள ஏராளமான விளையாட்டுத் தொடர்கள் கடும் குழப்பத்திற்கு உள்ளாகும். எனவே, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஒரே ஒரு பெண்ணின் விசாவால், இந்திய விளையாட்டு உலகத்துக்கே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

டெல்லியின் காற்று மாசு

இதே உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க பயிற்சி செய்து வரும் வெளிநாட்டு வீராங்கனைகள் டெல்லியின் காற்று மாசால் அவதிப்பட்டு வருகிறார்கள். அதைப் பற்றி கீழே உள்ள லிங்க்-கில் படிக்கலாம்.

Story first published: Thursday, November 15, 2018, 16:02 [IST]
Other articles published on Nov 15, 2018
English summary
Kosovo Boxer Donjeta Sadiku not granted Visa by Indian Government. This issue may affect India in future International sports events.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X