For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தடகள போட்டியில் 2வது தங்கம் வென்ற தமிழகத்தின் சூர்யா – கர்நாடகாவில் சாதனை

மங்களூரு: தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை சூர்யா கர்நாடகவில் 10,000 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார்.

கர்நாடகா மாநிலம் மங்களூருவில் 19 ஆவது பெடரேஷன் கோப்பை சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தது.

Laxmanan, Surya win second golds in Federation Cup

இதில் பெண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சூர்யா பந்தய துாரத்தை 34 நிமிடம் 42.05 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதன்மூலம் இவர் இம்முறை தனது 2 ஆவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஏற்கனவே இவர் 5000 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இப்போட்டியில் அடுத்த இரண்டு இடங்களை முறையே மகாராஷ்டிராவின் சஞ்சீவினி, சுவாதி பிடித்தனர்.

ஆண்களுக்கான 10000 மீட்டர் ஓட்டத்தில் இந்திய ராணுவ அணியின் லட்சுமணன் பந்தய துாரத்தை 29 நிமிடம் 49.91 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

ஏற்கனவே இவர் 5000 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். இப்போட்டியின் அடுத்த இரண்டு இடங்களை முறையே இந்திய ராணுவ அணியின் கோபி, கேதா ராம் கைப்பற்றினர்.

Story first published: Tuesday, May 5, 2015, 9:26 [IST]
Other articles published on May 5, 2015
English summary
Laxmanan of the Indian Army and Tamil Nadu's L Surya won gold medals in the 10km race in the men's and women's categories, respectively on the fourth and final day of the 19th Federation Cup National Senior Athletic championship at the Mangala stadium here on Monday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X