For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்தாலி, ஜெர்மனில F1 ரேஸ் நடத்துங்க.. இந்தியா மாதிரி மோசமான இடத்துல ஏன் நடத்துறீங்க?

பெர்லின் : உலகின் பிரபலமான கார் ரேஸ் ஆன எஃப் 1 ரேஸில் தொடர்ந்து பங்கு பெற்று வரும் முன்னணி ரேஸ் ஓட்டுனர் லெவிஸ் ஹாமில்டன், மோசமான இடமான இந்தியாவில் ஏன் ரேஸ் நடத்துகிறீர்கள் என கேட்டுள்ளார்.

எஃப் 1 ரேஸ் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு விளையாட்டு ஆகும். மேற்கத்திய நாடுகளில் அதற்கு வரவேற்பு உள்ளது.

இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் சில வருடங்களாக எஃப் 1 ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இதை குறித்து முன்னணி ஓட்டுனர் ஹாமில்டன் விமர்சித்துள்ளார்.

அது என்னப்பா எஃப் 1 ரேஸ்?

அது என்னப்பா எஃப் 1 ரேஸ்?

எஃப் 1 ரேஸ் பற்றி நம்மில் பலருக்கு சுத்தமாக என்னவென்றே தெரியாது, சிலருக்கு பெயர் மட்டும் தெரியும். சிலர் செய்தித் தாள்களில், இணையத்தில் அவ்வப்போது ஏதேனும் ஒரீரு செய்திகள் படித்திருக்கலாம். அதிகபட்சம் "நம்ம அல்டிமேட் ஸ்டார் அஜீத் குமார் கார் ரேஸ் ஓட்டுனாரே", "நரேன் கார்த்திகேயன்னு ஒரு தமிழ் நாட்டுக்காரர் கார் ரேஸ் ட்ரெஸ் போட்டுக்கிட்டு போஸ் கொடுப்பாரே" என்பது மட்டுமே தெரியும். அதற்கு காரணம், இது மேற்கத்திய விளையாட்டு. மேலும், தண்ணீராய் பணம் செலவாகும் விளையாட்டு.

ஆசியாவில் நுழைகிறது

ஆசியாவில் நுழைகிறது

ஆசிய நாடுகளில் இதை வளர்க்கும் வகையில் இந்தியா, சீனா, தென்கொரியா, அபுதாபி உள்ளிட்ட இடங்களில் எஃப் 1 ரேஸ் பாதை அமைக்கப்பட்டு வருடா வருடம் ரேஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. தற்போது புதிதாக வியட்நாம் நாட்டில் 10 வருடங்களுக்கு எஃப் 1 ரேஸ் நடத்த ஒப்பந்தம் போடப்பட்டு ரேஸ் ட்ராக் தயாராகி வருகிறது.

ஆளே இல்லாத ஆசியாவுல டீ ஆத்துறீங்க?

ஆளே இல்லாத ஆசியாவுல டீ ஆத்துறீங்க?

இது போல கார் ரேஸ் சந்தையை வளர்க்கும் நோக்கில் ஏன் புது இடங்களுக்கு போகிறீர்கள்? ஏற்கனவே பிரபலமாக இருக்கும் இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ரேஸ் நடத்தலாமே. அமெரிக்காவில் இப்போது பிரபலமாகி வருகிறது. அங்கே கூட போகலாமே. ஏன் கார் ரேஸ் ரசிக்க ஆளே இல்லாத ஆசிய நாடுகளில் போய் டீ ஆத்துறீங்க? என்ற பாணியில் கேள்வி எழுப்பியுள்ளார் ஹாமில்டன்.

முரண்பாடாக இருந்தது

முரண்பாடாக இருந்தது

அவர் சொன்னதெல்லாம் நன்றாகத் தான் இருந்தது. நியாயமாக இருந்தது. ஆனால், இந்தியா பற்றி சொல்லும் போது கொஞ்சம் வாயை விட்டு விட்டார். "இதற்கு முன் இந்தியாவிற்கு ரேஸ் நடந்த போது சென்றேன். அது மிக விசித்திரமானது. இந்தியா மிக மோசமான நாடு. அங்கே எங்கேயும் இல்லாத ஒரு இடத்தில் மிக பெரிதாக, அற்புதமாக ஒரு ரேஸ் ட்ராக் வைத்திருக்கிறோம். அங்கே ரேஸ்-க்கு சென்ற போது எனக்கு முரண்பாடாக இருந்தது" என குறிப்பிட்டுள்ளார் ஹாமில்டன்.

இந்தியாவுல எஃப் 1 ரேஸ் நடத்தக் கூடாதா?

இந்தியாவுல எஃப் 1 ரேஸ் நடத்தக் கூடாதா?

ஏன்பா ஹாமில்டன்! இந்தியாவுல நாங்க எஃப் 1 ரேஸ் எல்லாம் நடத்தக் கூடாதா? ரேஸ் விளையாட்டு இந்தியாவில் கொஞ்சம் முன்னேறனும், அந்த நாடு பொருளாதாரத்துல முன்னேறனும்னு சொல்லி இருந்தா கூட பரவாயில்லை. இப்படி பொசுக்குனு மோசமான நாடுன்னா எப்படி?

Story first published: Wednesday, November 14, 2018, 17:33 [IST]
Other articles published on Nov 14, 2018
English summary
Lewis Hamilton says India was such a poor place to have grandprix track
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X