For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"எழுந்து வா தமிழா".. ஒலிம்பிக்கில் காலரை தூக்கிவிட்டு.. களமிறங்கும் தமிழக "சோல்ஜர்கள்" - செம

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு இம்முறை தமிழகத்தில் இருந்து மெடல்கள் கிடைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

Recommended Video

Olympic Rings history in Tamil | Meaning behind the 5 Olympic rings | OneIndia Tamil

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32-வது ஒலிம்பிக் போட்டி நாளை (ஜுலை.23) மாலை 4.30 மணிக்கு உற்சாகமாக தொடங்கவுள்ளது. இந்தியாவில் இருந்து 125 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியா சார்பில் அதிக எண்ணிக்கையிலான வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் தொடர் இது தான்.

 களமிறங்கும் தமிழர்கள்

களமிறங்கும் தமிழர்கள்

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுத் தொடரில், மொத்தம் 18 விளையாட்டுகளில் நம்மவர்கள் களமிறங்குகின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், துப்பாக்கி சுடுதல், பாக்ஸிங், மல்யுத்தம், ஹாக்கி, பேட்மிண்டன், வில்வித்தை ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் இந்தியா பதக்கம் வெல்ல அதிக வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதிலும், மல்யுத்தம், பேட்மிண்டன், வில்வித்தை ஆகியவற்றில் நிச்சயம் மெடல் உறுதி என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.

 புதிய எண்ணிக்கை

புதிய எண்ணிக்கை

இந்நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு தமிழகத்தில் இருந்தும் அதிக எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இம்முறை களமிறக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக்கின் தொடக்க நாளன்று இந்திய தேசியக் கொடியை ஏந்திச்செல்ல பெண்கள் அணி சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆண்கள் அணி சார்பில் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்ப்ரீத் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 பவானி தேவி

பவானி தேவி

இந்த பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 11 போர் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர். ஆம்! தமிழ் மண்ணில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்க இந்த 11 பேரும் போர் வீரர்கள் தான். தமிழகத்தில் இருந்து நான்காவது முறையாக ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க உள்ள டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தமிழ்நாடு ஒலிம்பிக் வீரர்கள் குழு தலைவின் மாஸ்டர். சூப்பர்ல! தமிழக அணி லிஸ்டில், வாள் சண்டை பிரிவில் பங்கேற்கவுள்ள தமிழகத்தின் பவானி தேவி, இந்தியாவில் இருந்தே வாள் சண்டை பிரிவில் பங்கேற்கவுள்ள முதல் நபர் எனும் பெருமையை பெறவிருக்கிறார்.

 முழு லிஸ்ட்

முழு லிஸ்ட்

சரத் கமல் (டேபிள் டென்னிஸ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு), சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ் - ஆண்கள் ஒற்றையர் பிரிவு மட்டும்) வருண் அசோக் தக்கர் (படகுப் போட்டி - ஆண்கள் பிரிவு) கேசி கணபதி (படகுப் போட்டி - ஆண்கள் பிரிவு) நேத்ரா குமணன் (படகுப் போட்டி - பெண்கள் பிரிவு).

 ஒரே மாநிலத்தில் இருந்து

ஒரே மாநிலத்தில் இருந்து

ஆரோக்கிய ராஜீவ் ( 4*400 ரிலே), நாகநாதபாண்டி ( 4*400 ரிலே), ரேவதி வீரமணி ( 4*400 கலப்பு பிரிவு ரிலே) சுபா வெங்கடேசன் ( 4*400 கலப்பு பிரிவு ரிலே), தனலெட்சுமி சேகர் ( 4*400 கலப்பு பிரிவு ரிலே) ஆகிய 11 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் முதல் முறையாக ஒரே மாநிலத்தில் இருந்து தடகள வீரர்கள் 5 பேர் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

 தமிழகத்தில் இல்லையா?

தமிழகத்தில் இல்லையா?

ஆனால், இதில் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இளவேனில் வாலறிவன் சிறுவயதில் இருந்து குஜராத்தில் தான் வசித்து வருகிறார். இதனால் அவர் குஜராத் மாநிலத்தை பிரதிநிதித்துவம் படுத்துகிறார் என்பதை இங்கே புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், அவர் தமிழக அணி பட்டியலில் இடம்பெறமாட்டார். சிலர் அவரையும் தமிழக அணியில் இணைத்து பட்டியிடலாம். அது, அதிகாரப்பூர்வமாக சரியான தகவல் கிடையாது. இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதல் - 10 மீட்டர் ஏர் ரைஃபிள், பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

Story first published: Thursday, July 22, 2021, 18:05 [IST]
Other articles published on Jul 22, 2021
English summary
list of tamil nadu players participating in tokyo olympics 2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X