For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செஸ்ஸா – செக்ஸா? சர்ச்சையை ஏற்படுத்திய செஸ் போட்டி லோகோ…

By Staff

டெல்லி: 2018ல் நடக்க உள்ள உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான லோகோ, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது என்ன செஸ்ஸா அல்லது செக்ஸா என்று கேட்கும் அளவு, புதிய காமசூத்ரா விளம்பரம் போல் இந்த லோகோ அமைந்துள்ளது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, அடுத்த ஆண்டு நவம்பர், 11 முதல் 30 வரை லண்டனில் நடக்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மேக்னஸ் கார்சன் போட்டியிட உள்ளார். அவருடன் போட்டி போடக் கூடியவரை தேர்ந்தெடுக்கும் போட்டி, மார்ச் மாதம் நடக்க உள்ளது.

Logo criticised


லண்டன் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கான லோகோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை பார்த்த உடனேயே, முன்னாள் சாம்பியன்கள் பலரும், அட கர்மமே என்று கூறியுள்ளனர்.

ஆபாச படங்கள் வெளியிடும் புனோகிராபி மாதிரி, இது என்ன பானோகிராபியா என்று டுவிட்டரில் பலர் வறுத்து எடுத்துள்ளனர்.

லோகோவில், இரண்டு பேர் ஒருவருடன் ஒருவர் இணைந்திருப்பது போல் உள்ளது, அவர்களுடைய கையில் செஸ் போர்டு உள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கொருவர் கால்கள் பின்னிக் கொண்டு இருப்பது ஆபாசமாகவும், விரசமாகவும் அமைந்துள்ளது.

உலக செஸ் அமைப்பான பிடே ஒப்புதல் அளித்துள்ள இந்த லோகோவில் மிகப் பெரிய தவறும் உள்ளது. ஐந்து முறை உலகச் சாம்பியனான இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் அதை சுட்டிக் காட்டியுள்ளார்.

படு ஆபாசமாக உள்ளதுடன் லோகோ அபத்தமாகவும் உள்ளது. செஸ் போர்டு 8 X 8 கட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால், இதில் 6 X 6 உள்ளது' என்று ஆனந்த் கூறியுள்ளார்.

ரஷியாவைச் சேர்ந்த சுகா டிசைன்ஸ் என்று விளம்பர நிறுவனம் இந்த விளம்பரத்தை வடிவமைத்துள்ளது. 2016 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி உள்ளிட்டவற்றுக்கும் இந்த நிறுவனமே லோகோ வடிவமைத்து கொடுத்தது.

குழந்தைகளை செஸ் விளையாடும்படி எப்படி கூறுவது என்ரு முன்னாள் சாம்பியன் சுசான் போல்கர் கூறியுள்ளார். இந்த லோகோ டிவியில் வரும் மிட்நைட் மசாலா போன்று உள்ளது என்று ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, December 22, 2017, 13:09 [IST]
Other articles published on Dec 22, 2017
English summary
World Chess championship logo creates controversy
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X