ரிங்குக்குள் "உலக சாம்பியன்".. அசந்தா காலி.. லோவ்லினாவுக்கு காத்திருக்கும் செமி ஃபைனல் சவால்

ஜப்பான்: பெண்களுக்கான வெல்டர் அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை லோவ்லினாவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அவர் யாருடன் மோதப் போகிறார் தெரியுமா?

குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (64-69 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன. 2-வது காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் சீன தபேயின் நின்-சின்-சென்-ஐ எதிர்கொண்டார்.

இதில் லோவ்லினா 4:1 (30-27, 29-28, 28-29, 30-27, 30-27) என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

மேரிகோமை தொடர்ந்து.. பாக்சிங்கில் ஏமாற்றம் அளித்த இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித்.. படுதோல்வி! மேரிகோமை தொடர்ந்து.. பாக்சிங்கில் ஏமாற்றம் அளித்த இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித்.. படுதோல்வி!

 Welterweight உலக சாம்பியன்

Welterweight உலக சாம்பியன்

அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் வீராங்கனைகளுக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும். ஆனால் அவர் நிச்சயம் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், லோவ்லினாவின் அரையிறுதி ஆட்டம் அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. அவர் எதிர்கொள்ளப் போவது யாரை தெரியுமா? Welterweight உலக சாம்பியன் புசானஸ் சுர்மெனெலி (Busenaz Surmeneli) என்பவரை.

 குவியும் தங்கம்

குவியும் தங்கம்

துருக்கியில் பிறந்து எதிரிகளை தனது பன்ச்களால் துருவி எடுக்கும் புசானஸ், 10 வயதில் இருந்து பாக்சிங் விளையாடி வருகிறார். யூத் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை குவித்தவர். இத்தாலியின் காசியாவில் நடைபெற்ற 2017 மகளிர் ஐரோப்பிய ஒன்றிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் புசானஸ் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்பெயினின் அல்கோபெண்டாஸில் நடந்த 2019 பெண்கள் ஐரோப்பிய அமெச்சூர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். ரஷ்யாவின் உலன்-உடேயில் நடைபெற்ற 2019 AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அவர் உலக சாம்பியன் பட்டம் வென்று அசர வைத்தார். பிப்ரவரி 2020 இல், ஹங்கேரியின் டெபிரெசனில் நடைபெற்ற 64 வது Bocskai István நினைவு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

 உச்சக்கட்ட ஆட்டம்

உச்சக்கட்ட ஆட்டம்

இவ்வளவு பெருமைகளுக்கும் சொந்தக்காரனான புசானஸ் சுர்மெனெலியைத் தான் நமது லோவ்லினா எதிர்கொள்கிறார். அவ்வளவு சாதாரணமான போட்டியாக இது அமைந்துவிடாது. பாட்ஸா படத்தில் ரஜினியை பார்த்து அவரது தம்பி கதாபாத்திரம் சொல்வது போல், "நாடி, நரம்பு, இரத்தம், சதை என அனைத்திலும் சண்டை வெறி ஊறிய ஒருவரால் தான் இப்படி அடிக்க முடியும்" என்பது போல், லோவ்லினா தனது உச்சக்கட்ட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்.

 2வது வீராங்கனை

2வது வீராங்கனை

அப்படியே நம்ம லோவ்லினா குறித்தும் பார்த்துடுவோம். லோவ்லினா போர்கோஹெய்ன், 2018 AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மற்றும் 2019 AIBA மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றார். புதுடில்லியில் நடந்த முதல் இந்திய ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கமும், கவுகாத்தியில் நடைபெற்ற 2 வது இந்திய ஓபன் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். அவர் 69 கிலோ வெல்டர் வெயிட் பிரிவில் 3 வது இடத்தைப் பெற்றார். அசாமில் இருந்து ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் பெண்மணி இவர் தான். அதுமட்டுமின்றி, அசாம் மாநிலத்தில் இருந்து சிவ தாபாவுக்குப் பிறகு நாட்டிற்காக விளையாடும் இரண்டாவது குத்துச்சண்டை வீராங்கனையும் இவர் தான். 2020 ஆம் ஆண்டில், அஸ்ஸாமில் இருந்து அர்ஜுனா விருது பெற்ற ஆறாவது நபர் சாட்சாத் நம் லோவ்லினா தான்.

 லோவ்லினா தேர்வு

லோவ்லினா தேர்வு

லோவ்லினா பெற்றோர் டிக்கென் மற்றும் மாமோனி போர்கோஹெய்ன். அவரது தந்தை டிக்கென் ஒரு சிறிய அளவில் வணிகம் செய்பவர் தான். மகளின் லட்சியத்திற்கு பணம் திரட்ட கூட அவரால் முடியவில்லை. அவரது மூத்த இரட்டை சகோதரிகளான லிச்சா மற்றும் லிமா ஆகியோரும் கிக் பாக்ஸிங்கில் தேசிய அளவில் போட்டியிட்டனர். ஆனால் அதன் பிறகு அவர்கள் அதைத் தொடரவில்லை. லோவ்லினாவும் கிக் பாக்ஸராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஆனால் பின்னர் குத்துச்சண்டைக்கு வாய்ப்பு கிடைத்து பின்னர் மாறினார். லோவ்லினா படித்த உயர்நிலைப் பள்ளியான பார்பதார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய விளையாட்டு ஆணையம் போட்டிகளை நடத்தியது. அங்கு தான், புகழ்பெற்ற பயிற்சியாளர் பதும் போரோவால் லோவ்லினா கவனிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார், அவர் 2012 இல் லோவ்லினாவுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கினார்.

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

இப்போது ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை லோவ்லினா வந்துவிட்டார். இதோ இன்னும் இரண்டே போட்டிகள் தான் தங்கம் வெல்வதற்கு பாக்கி உள்ளது. வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தான் தனது அரையிறுதிப் போட்டி லோவ்லினா, புசானஸ் சுர்மெனெலியுடன் மோதுகிறார். இந்திய நேரப்படி காலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. அதற்கு இடையில் நான்கு நாட்கள் முழுமையாக அவருக்கு மீதம் உள்ளன. அதில் சரிபாதி ஓய்வு, பயிற்சி என்று பிரித்து தன்னை தயார் செய்து கொள்ள லோவ்லினா தயாராகி வருகிறார். அரையிறுதிக்கு தயாராகும் பொருட்டு உணவுகளும் அவருக்கு ஏற்ப தயார் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் என்று இந்தியா அதிகம் எதிர்பார்த்த போட்டிகளில் மெடல் கிடைக்காத விரக்தியில் இந்திய ஒலிம்பிக் சங்கம் உள்ளது. இந்நிலையில், அடுத்து மெடலை நெருங்கும் போட்டியாளர்களை எப்படியாவது புஷ் செய்து மெடலை கைப்பற்ற வைத்துவிட வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். லோவ்லினாவை பொறுத்தவரை அவர் ஏற்கனவே வெண்கலப்பதக்கம் வென்றுவிட்டாலும், தங்கம் வரை அவரை கொண்டுச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்களாம். எவ்வளவு தான் முயன்றாலும், அந்த நிமிடம் அந்த நொடி, லோவ்லினா வெளிப்படுத்தும் ஆற்றல் தான் அனைத்தையும் பேசும். தங்கம் அடிச்சுட்டு வாங்க லோவ்லினா! வாழ்த்துகள்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Lovlina to meet world champ Busenaz Surmeneli - லோவ்லினா
Story first published: Friday, July 30, 2021, 13:17 [IST]
Other articles published on Jul 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X