For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவா பள்ளிப் புத்தகத்திலிருந்து துரத்தி அடிக்கப்படுகிறார் மரியா ஷரபோவா!

பனாஜி, கோவா: ஊக்க மருந்து உட்கொண்டதால் 2 ஆண்டு காலம் டென்னிஸ் ஆட தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அடுத்து இந்தியாவில் ஒரு சிக்கலை சந்திக்கவுள்ளார்.

மெலடோனியம் என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டதால் 2 ஆண்டுகளுக்கு டென்னிஸ் ஆடுவதிலிருந்து மரியாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் கோவா மாநிலத்தில ஒரு சிக்கல் வந்துள்ளது.

Maria lesson may go off in Goan text books

கோவாவில் உள்ள பள்ளிக்கூடங்களில் மரியா ஷரபோவா குறித்து ஆங்கிலப் பாடத்தில் உள்ளது. இதற்குத்தான் தற்போது சிக்கல் வந்துள்ளது. Reach for the Top என்ற தலைப்பில் ஒரு பாடம் 9ம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் அப்படி மரியா ஷரபோவா கடுமையான உழைப்பின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தார் என்பதை விளக்கியுள்ளனர்.

ஆனால் அவர் ஊக்க மருந்தின் மூலம்தான் புகழுச்சிக்குப் போனார் என்பது தற்போது அம்பலமாகி விட்டதால் இந்தப் பாடத்தை எடுத்தாக வேண்டிய நிலையில் கோவா அரசு உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு கல்வியாளர்களும் இந்தப் பகுதியை நீக்க வேண்டும் என கோவா அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் இதுகுறித்து கோவா அரசு முடிவெடுக்கவுள்ளதாம்.

Story first published: Friday, July 29, 2016, 15:41 [IST]
Other articles published on Jul 29, 2016
English summary
A lesson on Tainted Tennis star Maria Sharapova will be lifted off from Goan text books.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X