For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பராலிம்பிக் சங்கம் ஒரு துரும்பையும் கிள்ளிப் போடலை...'தங்கமகன்' மாரியப்பன் 'பாய்ச்சல்' #paralympics

By Mathi

ரியோ: தமிழக பாரலிம்பிக் சங்கம் எனக்காக எந்த ஒரு துரும்பையும் கிள்ளிப் போடலை.. என்னுடைய வெற்றிக்கு ஒரே காரணம் குருநாதர் சத்யநாராயணா சார் மட்டுமே... ராஜேந்திரன், இளம்பரிதி போன்றோர் இப்போது திடீரென வந்து உரிமை கோருகின்றனர் என கொந்தளித்திருக்கிறார் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர் சேலம் பெரிய வடகம்பட்டி மாரியப்பன். அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

2 ஆண்டுக்கு முன்னர் நான் அவரை சந்தித்தேன். அப்போது முதல் எனக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவரை சந்தித்த பின்னர்தான் காலணி அணிந்து பயிற்சி பெற தொடங்கினேன்.

மாதம் ரூ10,000

மாதம் ரூ10,000

அதுவரைக்கும் வெறுங்காலில்தான் நான் உயரம் தாண்டுவேன். அத்துடன் ரூ. 10 ஆயிரம் மாதந்தோறும் கொடுத்து என்னுடைய குடும்பத்துக்கும் உதவியாக இருந்தார்.

ஜெர்மனிக்கு அனுப்பினார்..

ஜெர்மனிக்கு அனுப்பினார்..

பயிற்சி அளிக்கவே பணம் வாங்கும் இந்த காலத்தில் பணம் கொடுத்து யார் பயிற்சி அளிப்பார்கள். ஆனால், சத்ய நாராயாணா சார் எனக்குச் செய்தார். என்னை ஜெர்மனிக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்தார்.

சத்யநாரயணா சார்தான்..

சத்யநாரயணா சார்தான்..

எனக்காக அவர் எவ்வளவோ கஷ்டப்பட்டுள்ளார். சத்யநாராயணா சார் தந்த பயிற்சியிலும் உதவியினாலும்தான் இன்று நான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.

யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்களே..

யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்களே..

இப்போது நான் வெற்றி பெற்ற பிறகு ராஜேந்திரன், இளம்பரிதி போன்றவர்கள் உரிமை கொண்டாடுவதாக எனக்குத் தகவல் வருகிறது. அவர்களுக்கும் இந்த வெற்றிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பராலிம்பிக் சங்கம் மீது பாய்ச்சல்

பராலிம்பிக் சங்கம் மீது பாய்ச்சல்

தமிழ்நாடு பராலிம்பிக் சங்கம் எனக்காகத் துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை. இந்த வெற்றிக்கு முழு முதற்காரணம் எனது குரு சத்ய நாராயாண சார்தான். இந்த பதக்கத்தை நான் அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.

Story first published: Thursday, September 15, 2016, 15:19 [IST]
Other articles published on Sep 15, 2016
English summary
Rio Gold Medalist Mariyappan said that "Neither has the Tamil Nadu Paralympic Committee done anything for me"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X