For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிரடி திட்டம்.. பத்ம விருதுகள் பட்டியலில் அதிக பெண்கள்.. மேரி கோம், பிவி சிந்துவுக்கு பரிந்துரை!

டெல்லி : இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.

இந்த ஆண்டு 9 விளையாட்டு வீராங்கனைகள் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இரண்டு வீரர்கள் பெயரை கடைசி நேரத்தில் சேர்த்துள்ளது.

Mary Kom, PV Sindhu among recommended sports persons for Padma awards - complete list

விளையாட்டில் மகளிருடைய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என தெரிகிறது.

இந்த ஆண்டுக்கான விளையாட்டு வீரர்கள் அடங்கிய பத்ம விருதுகள் பரிந்துரை பட்டியலில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்ம விபூஷன் விருதுக்காகவும், பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து பத்ம பூஷன் விருதுக்காகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

பத்ம விபூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் முதல் வீராங்கனை மேரி கோம் தான் என கூறப்படுகிறது. அந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டால் அது வரலாற்று நிகழ்வாக இருக்கும்.

36 வயதாகும் மேரி கோம் உலக அமெச்சூர் குத்துச்சண்டை போட்டிகளில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அது யாரும் எட்டாத உலக சாதனை ஆகும். அதை குறித்தே இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷன் விருதுக்கு அவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் உலக பேட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்ற பிவி சிந்து, இந்தியாவின் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

பத்ம விருது பரிந்துரை பட்டியல் -

மல்யுத்த வீராங்கனை - வினேஷ் போகாட்

டேபிள் டென்னிஸ் வீராங்கனை - மணிகா பத்ரா

மகளிர் கிரிக்கெட் கேப்டன் - ஹர்மன்பரீத் கவுர்

மகளிர் ஹாக்கி கேப்டன் - ராணி ராம்பால்

முன்னாள் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை - சுமா ஷிரூர்

மலையேற்றம் செய்யும் இரட்டையர்கள் - தஷி மற்றும் நன்க்ஷி மாலிக்

வில்வித்தை வீரர் - தருன்தீப் ராய்

ஹாக்கி வீரர் - எம்பி கணேஷ்

Story first published: Thursday, September 12, 2019, 16:35 [IST]
Other articles published on Sep 12, 2019
English summary
Mary Kom, PV Sindhu among recommended sports persons for Padma awards. Here is the complete list of recommended sports persons for Padma Awards 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X