For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பத்ம விருதுகள் அறிவிப்பு - இந்தியாவின் 2வது உயரிய விருதை பெறுகிறார் மேரி கோம்

டெல்லி : மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய விருதான பத்ம விபூஷண் விருதை குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பெறுகிறார்.

நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடெங்கிலும் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த மேரி கோம், பி.வி. சிந்து, ஷாகிர் கான் உள்ளிட்ட 8 வீரர்கள் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பத்ம விருதுகள் அறிவிப்பு

பத்ம விருதுகள் அறிவிப்பு

இந்தியாவின் 71வது குடியரசு தினம் இன்று நாடெங்கிலும் மிகவும் சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்தியாவின் உயரிய விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

141 பேருக்கு பத்ம விருதுகள்

141 பேருக்கு பத்ம விருதுகள்

நாடெங்கிலும் பல்வேறு துறைகளை சார்ந்த 141 பேர் இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும் பத்ம பூஷண் விருது 16 பேருக்கும் பத்மஸ்ரீ விருது 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேரி கோமிற்கு பத்ம விபூஷண்

மேரி கோமிற்கு பத்ம விபூஷண்

நாடெங்கிலும் குத்துச்சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை சேர்ந்த 8 வீரர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் நாட்டின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பெறுகிறார்.

பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது பெற்றவர்

பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது பெற்றவர்

ராஜ்யசபா உறுப்பினராகவும் உள்ள குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கடந்த 2012ல் லண்டன் ஒலிம்பிக்சில் வெண்கலம் வென்றவர். மேலும் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர். இவர் கடந்த 2013ல் பத்ம பூஷண் மற்றும் 2006ல் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர்

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர்

இதேபோல பேட்மின்டன் வீராங்கனை பி.வி சிந்துவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றவர். மேலும் பேட்மின்டனில் உலக சாம்பியன் பட்டம் வென்ற ஒரே இந்தியரான சிந்துவுக்கு கடந்த 2015ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

பத்மஸ்ரீ விருது பெறும் விளையாட்டு வீரர்கள்

பத்மஸ்ரீ விருது பெறும் விளையாட்டு வீரர்கள்

இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகளை 118 நபர்கள் பெறும்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், ஹாக்கி மகளிர் அணி கேப்டன் ராணி ராம்பால், முன்னாள் ஆண்கள் ஹாக்கி கேப்டன் எம்.பி. கணேஷ், துப்பாக்கி சுடும் வீரர் ஜீது ராய், முன்னாள் மகளிர் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் ஒய்னம் பெம்பேம் தேவி, வில்வித்தை வீரர் தருண்தீப் ராய் ஆகிய 6 விளையாட்டு வீரர்களும் பத்மஸ்ரீ விருதினை பெறுகின்றனர்.

Story first published: Sunday, January 26, 2020, 13:23 [IST]
Other articles published on Jan 26, 2020
English summary
Mary kom awarded Padma Vibhushan & PV Sindhu awarded Padma Bhushan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X