
ஆறு தங்கப் பதக்கம்
உலக சாம்பியன்ஷிப் தொடர்களில் ஏழு முறை மோதி உள்ள மேரி கோம் அதில் ஆறு தங்கப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அதிக தங்கம் வென்ற உலகின் ஒரே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தான்.

எதிர்பார்ப்பு
இந்த நிலையில், தன் ஏழாவது தங்கம் வென்று தன் உலக சாதனையை தானே முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் அரையிறுதிப் போட்டியில் ஆடினார் மேரி கோம்.

தாக்குதல்
துருக்கி வீராங்கனை துவக்கம் முதலே தாக்குதல் பாணியில் ஆடினார். மேரி கோம் தடுப்பதும், பின்னர் தாக்க முயல்வதுமாக இருந்தார். ஒரு கட்டத்தில் துருக்கி வீராங்கனையின் குத்தில் நிலை தடுமாறிய மேரி கோம் ஒரு கணம் கீழே விழுந்தார்.

மேரி கோம் தோல்வி
அப்போதே துருக்கி வீராங்கனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேரி கோம் 1 - 4 என்ற கணக்கில் மோசமான தோல்வியை தழுவினார். அரையிறுதியில் தோல்வி அடைந்த மேரி கோம் வெண்கலப் பதக்கம் வென்றார்.

உலக சாதனை
இந்தப் பதக்கமும் மிகப் பெரிய உலக சாதனையை செய்துள்ளது. ஆம், உலகிலேயே அதிக உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற வீராங்கனை மேரி கோம் தான். ஏழு உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை அவர் தான்.