For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் WWEக்கு போகவே மாட்டேன்.. ஏன்னா.. அதிர வைத்த ரெஸ்லிங் வீரர்!

நியூயார்க் : WWE தான் ரெஸ்லிங் உலகின் நம்பர் 1 நிறுவனம். அனைத்து ரெஸ்லிங் வீரர்களுக்கும் WWE-இல் சேர வேண்டும் என்பதே கனவாக இருக்கும்.

ஆனால், பில்லியன் டாலர் கம்பெனியாக திகழும் அந்த கம்பெனி பக்கமே போக மாட்டேன் என பிரபல ரெஸ்லிங் வீரர் மாட் ஹார்டி கூறி உள்ளார்.

அதற்கு என்ன காரணம் என்பதையும் அவர் கூறி உள்ளார். தற்போது புதிய ரெஸ்லிங் நிறுவனம் ஒன்றில் முக்கிய வீரராக இருக்கும் அவர் தனக்கு பணம் முக்கியமில்லை என கூறி உள்ளார்.

எப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்!எப்பவும் உம்முன்னு இருந்தா இப்படித்தான்.. முன்னாள் வீரரை செமயாக கலாய்த்து விட்ட யுவராஜ் சிங்!

ஹார்டி பிரதர்ஸ்

ஹார்டி பிரதர்ஸ்

WWE அரங்கில் "ஹார்டி பிரதர்ஸ்" என்றால் மிக பிரபலம். மாட் ஹார்டி மற்றும் ஜெப் ஹார்டி என இருவரும் டேக் டீமாக சேர்ந்து போட்டிகளில் கலக்குவார்கள். அவர்கள் வெற்றி, தோல்வியை தாண்டி கடுமையாக பறந்து, பறந்து சண்டை போடுவதை காணவே பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

மீண்டும் WWE

மீண்டும் WWE

பல சமயங்களில் மாட் ஹார்டி, ஜெப் ஹார்டி தனித் தனியாகவும் WWEஇல் போட்டியிட்டு உள்ளனர். சில ஆண்டுகளாக இருவரும் WWEஇல் பங்கேற்காமல் இருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவரும் ஜோடியாக மீண்டும் WWE-இல் களமிறங்கினர்.

மாட் ஹார்டி நிலை

மாட் ஹார்டி நிலை

அப்போது எல்லாமே சரியாகத் தான் சென்றது. இடையே ஜெப் ஹார்டி கடுமையாக காயம் அடைந்தார். அதனால், மாட் ஹார்டி தனித்து விடப்பட்டார். அவருக்கு முக்கியமான போட்டிகளை கொடுக்காத WWE அவரது கேரக்டரையும் சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியது.

சிக்கல்

சிக்கல்

தான் வித விதமான கேரக்டர்களில் வலம் வர வேண்டும் என மாட் ஹார்டி விரும்பினாலும் WWE அவரை பல ஆண்டுகளுக்கு முன் எப்படி பார்த்ததோ அதே போலவே இப்போதும் பார்த்தது. அதுதான் சிக்கல். அதை விரும்பாத மாட் ஹார்டி புதிய ரெஸ்லிங் நிறுவனமான "ஆல் எலைட் ரெஸ்லிங்"கில் சேர்ந்து விட்டார்.

மனநிலை

மனநிலை

இது பற்றி பேசுகையில், மீண்டும் WWEக்கு போன போது அங்கே என்ன கிடைக்கும் என எனக்கு தெரியும். ஆனால், எதாவது புதிதாக சிந்திக்கலாம். ஆனால், அவர்கள் மனநிலை, நம்மை இவர் இப்படித்தான் என முடிவு செய்து வைத்துக் கொள்வதாக உள்ளது என்றார்.

பணம் வேண்டாம்

பணம் வேண்டாம்

அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நான் விலக வேண்டிய நிலையில் இருந்தேன். ஏனெனில், நான் வேறு எங்காவது சென்று ரெஸ்லிங்கில் புதிதாக உருவாக்கி, மகிழ்ச்சியாக இருப்பேன் என்றார் மாட் ஹார்டி. ஆல் எலைட் ரெஸ்லிங் அவர் சுதந்திரமாக இருக்கிறார் என்பதையே இப்படி சுட்டிக் காட்டி உள்ளார்.

Story first published: Tuesday, June 9, 2020, 12:22 [IST]
Other articles published on Jun 9, 2020
English summary
Matt Hardy says he won’t going to WWE whatever the money they offer after he was not happy with his character development.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X